ETV Bharat / crime

ஆரணி அருகே தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் 10 சவரன் நகைகள் கொள்ளை - ஆரணி அருகே 10 சவரன் நகைகள் கொள்ளை

ஆரணி அருகே பனப்பாக்கம் கிராமத்தில் தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் பீரோவை உடைத்து 10 சவரன் நகைகள், ரூ.16,000 ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

ஆரணி அருகே பனப்பாக்கம் கிராமத்தில் தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் பீரோவை உடைத்து 10. சவரன் நகைகள் மற்றும் ரொக்க பணம் கொள்ளை

author img

By

Published : Jun 25, 2021, 9:48 PM IST

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அடுத்த பனப்பாக்கம் கிராமத்தில் வசித்துவருபவர் பிரபாகரன் (37). சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார்.

இவரது மனைவி கனிமொழி, மகள் ரக்ஷனா, மகன் முகுந்தகுமார் ஆகியோர் நேற்று இரவு வீட்டு வராண்டாவில் படுத்து தூங்கினர்.

இன்று காலை எழுந்து பார்த்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் படுக்கை அறைகளில் இருந்த இரண்டு பீரோக்களை உடைத்து அதிலிருந்த செயின், நெக்லஸ், கம்மல், மோதிரம் உள்ளிட்ட 10 சவரன் தங்க நகைகளும், சுமார் ஒரு கிலோ எடையுள்ள கொலுசு உள்ளிட்ட வெள்ளி நகைகளும், ரூ.16,000 ரொக்கப் பணமும் கொள்ளையடித்துச் சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும், கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் செல்லும் அவசரத்தில் இரண்டு குத்துவிளக்குகள், வெள்ளி கிண்ணங்களை மெத்தை மேல் போட்டுவிட்டுச் சென்றிருந்தனர்.

நள்ளிரவில் நடைபெற்ற இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து பிரபாகரன் ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

ஆரணி காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து விசாரணை செய்தனர்.

வீட்டில் ஏசி பழுதானதால் பிரபாகரன் குடும்பத்தினருடன் வராண்டாவில் படுத்து தூங்குவதை அறிந்த நபர்கள்தான் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கக் கூடுமென்று கிராம மக்கள் தரப்பில் கூறுகின்றனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.