ETV Bharat / city

தொண்டர்கள் தான் முக்கியம், கட்சியை விட்டுவிட மாட்டேன்- சசிகலா!

வேலூர்: தொண்டர்கள் தான் முக்கியம், இந்தக் கட்சியை அப்படியெல்லாம் நான் விட்டுவிட மாட்டேன். கவலைப்படாதிங்க, சீக்கிரம் எல்லாத்தையும் சரி செய்திடலாம் என்று வேலூர் அதிமுக பிரமுகரிடம் சசிகலா பேசிய ஆடியே வெளியாகியுள்ளது.

தொண்டர்கள் தான் முக்கியம். இந்த கட்சியை விட்டுவிட மாட்டேன் : செல்போனில் உரையாடிய சசிகலா!

author img

By

Published : Jun 13, 2021, 2:30 AM IST

அண்மைக் காலமாக வி.கே.சசிகலா தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுக மற்றும் அமமுக நிர்வாகிகளிடம் செல்போன் மூலம் பேசும் ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜூன் 11) மாலை வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகரும் முன்னாள் மாவட்ட செயலாளருமான எல்.கே.எம்.பி.வாசு என்பவரிடத்தில் சசிகலா பேசியிருக்கிறார். தற்போது அந்த ஆடியோ வெளியாகி உள்ளது. அதில்,

தொண்டர்கள் தான் முக்கியம். இந்தக் கட்சியை விட்டுவிட மாட்டேன் : செல்போனில் உரையாடிய சசிகலா!

எல்.கே.எம்.பி.வாசு தாங்கள் தான் தற்போது வரணும் அப்போது தான் அம்மா கண்ட ஆட்சியை மீண்டும் கொண்டு வரமுடியும் என்று கூறினார்.

அதற்கு பதிலளித்த சசிகலா, “தொண்டர்கள் தானே கட்சி, தொண்டர்கள் தானே முக்கியம். ஒன்றும் கவலைப்படாதீர்கள் வாசு, தான் நிச்சயம் வருவேன் என்றும் விரைவில் எல்லோரையும் சந்திப்பதாகவும். இந்தக் கட்சியை அப்படியெல்லாம் தான் விட்டு விட மாட்டேன் என்றார்.

மேலும் நிச்சயம் திரும்ப அம்மா செய்த மாதிரி மக்களுக்கும் நல்லதை செய்ய வருவோம் கவலைப்படாதீர்கள். எல்லாவற்றையும் சரி செய்துவிடுவோம், கவலைப் படவேண்டாம். கட்சியினுடைய தொண்டர்கள் எல்லோருமே தனக்கு முக்கியம். எல்லோரும் தனக்கு கடிதம் போடுகிறார்கள் எனவும் எல்லோரிடமும் பேசிவருகிறேன், கவலைப்படாதீர்கள், சீக்கிரம் சந்திக்கிறேன்” என்றார்.

இதையும் படிங்க:கள்ளச்சாராய சோதனை - ரூ 8.5 லட்சத்தை எடுத்த காவலர்கள் மீது வழக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.