ETV Bharat / city

சென்னையில் அதிக மரணங்கள்... அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக நச்சுப்புகையை வெளியேற்றும் அனல் மின் நிலையங்கள்!

பூவுலகின் நன்பர்கள், CREA, ASAR ஆகிய அமைப்புகளுடன் இணைந்து நடத்திய ஆய்வில், தமிழ்நாட்டில் உள்ள அனல் மின் நிலையங்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக நச்சு வாயுக்களை வெளியேற்றி, சுற்றுச்சூழலுக்கு ஈடுசெய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்துவதும், காற்று மாசுபாட்டைக் குறைக்க அவை போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

பூவுலகின் நண்பர்கள்
பூவுலகின் நண்பர்கள்
author img

By

Published : Oct 27, 2021, 10:21 PM IST

சென்னை: பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பூவுலகின் நன்பர்கள், CREA, ASAR ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாட்டில் உள்ள அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியாகும் நச்சு வாயுக்களின் அளவு, நச்சுத்தன்மையின் அளவைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் ஃப்ளூ கேஸ் டிசல்ஃபரைசர் (FGD) கருவியைக் கொண்ட மின் உற்பத்தி நிலையங்களின் எண்ணிக்கையைக் கண்டறிந்தனர்.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆன்லைன் தொடர் உமிழ்வு கண்காணிப்பு அமைப்பு (OCEMS), மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், NLC இந்தியா, தேசிய அனல் மின் நிறுவனம் ஆகியவற்றிலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

நச்சுப்புகையை வெளியேற்றும் அனல் மின் நிலையங்கள்

நச்சுவாயுவைக் குறைக்கும் கருவிகள்

இந்த ஆய்வின்படி, தமிழ்நாட்டில் தற்போது இயங்கி வரும் 40 அனல் மின் நிலையங்களில் (13,160 மெகாவாட்) இரண்டில் மட்டுமே (1200 மெகாவாட்) ஃப்ளூ கேஸ் டிசல்பூரைசர் (எஃப்ஜிடி) பொருத்தப்பட்டுள்ளது. எட்டு மின் உற்பத்தி நிலையங்களுக்கு FGD உபகரணங்களை வாங்குவதற்கு ஏலம் கோரப்பட்டுள்ளது.

ஆனால் ஏலத்தில் பெரிய முன்னேற்றம் இல்லை. 30 அனல் மின் நிலையங்கள் அவை வெளியிடும் நச்சு வாயுவை குறைக்கும் நோக்கத்தில் FGD கருவி பொருத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் தமிழ்நாடு, என்எல்சியால் இயக்கப்படும் எந்த அனல் மின் நிலையங்களும் தங்கள் ஆலைகளில் எஃப்ஜிடி அமைக்க டெண்டர் கோரவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

76,000 உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்!

ஆய்வை மேற்கொண்ட CREAவின் உறுப்பினர் சுனில் தஹியா இது குறித்துப் பேசுகையில், “நாட்டில் உள்ள அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியாகும் நச்சு வாயுக்களுக்கான தரத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நிர்ணயித்துள்ளது. ஆலைகளில் இருந்து வெளியேறும் நச்சு வாயுவைக் குறைக்க இரண்டு ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டது.

ஆனால் சலுகைக் காலம் நீட்டிக்கப்பட்டு, மார்ச் 21, 2021க்குள் 2024/25 வரை சலுகைக் காலம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், மாசு அளவைக் குறைக்க நடவடிக்கை எடுத்திருந்தால், ஆண்டுக்கு 76,000 உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம் என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மாசுக்கட்டுப்பாட்டு கருவி பயன்படுத்தாத நிலையங்கள்

இந்தக் காலகட்டத்தை மொத்தம் 10 ஆண்டுகளாக நீட்டித்ததன் விளைவாக அனல் மின் நிலையங்கள் தொடர்ந்து நச்சு வாயுக்களை வெளியேற்றி மனித ஆரோக்கியத்தையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கிறது. இந்தப் பத்தாண்டுகளில் உமிழ்வைக் குறைப்பதற்கான FGD சாதனத்தைப் பொருத்துவதில் எவ்வித முன்னேற்றம் இல்லை. தமிழ்நாடு அரசு, என்எல்சியால் இயக்கப்படும் ஒரு அனல் மின் நிலையம் கூட மாசு உமிழ்வைக் குறைக்க எஃப்ஜிடி கருவிகளை நிறுவ ஒரு டெண்டர்கூட விடவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.

நெய்வேலி, சென்னை, தூத்துக்குடி, மேட்டூர் ஆகிய இடங்கள் நிலக்கரி அதிகம் எரியும் பகுதிகள். உலகில் நிலக்கரி எரியும் முதல் 50 இடங்களில் நெய்வேலியும் சென்னையும் உள்ளன. இந்தப் பகுதிகளில் செயல்படும் அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் உமிழ்வைக் கண்காணிப்பது குறித்தும் ஆய்வு குறிப்பிடுகிறது.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆன்லைன் தொடர்ச்சியான உமிழ்வு கண்காணிப்பு அமைப்பின் (OCEMS) இணையதளத்தில் வழங்கப்பட்ட தரவுகளுக்கும் ஏப்ரல், மே, ஜூன் 2021இல் பெறப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் கிடைக்கும் தரவுகளுக்கும் இடையே குறிப்பிடத்தக்க முரண்பாடுகள் உள்ளன.

அதிகம் வெளியேற்றப்படும் சல்ஃபர் டை ஆக்சைடு

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தரவு, பல அனல் மின் நிலையங்களில், மனிதர்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் வாயுவான சல்பர் டை ஆக்சைடு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக வெளியேற்றப்பட்டதை மேலும் உறுதிப்படுத்துகிறது.

இந்த ஆய்வுக்காக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களுக்கும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணையதளம் மூலம் பெறப்பட்ட தகவல்களுக்கும் பல முரண்பாடுகள் இருந்தன. அனல் மின் நிலையங்கள் வெளியிடும் மாசுபாட்டின் அளவு குறித்து நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகள் வழங்கும் தரவுகளின் நம்பகத்தன்மைக்கு இது வழிவகுக்கிறது.

அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியாகும் மாசுக்களின் அளவு சில அனல் மின் நிலையங்களுக்கு ஒரு அளவீட்டிலும் மற்ற அனல் மின் நிலையங்களுக்கு வேறு அளவிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அளவீடுகளில் ஒற்றுமை இல்லாததால், மாசு உமிழ்வை ஒப்பிட்டுப் பார்ப்பது கடினம்” எனத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அதிக மரணங்கள்

இதுகுறித்து ஆய்வு நடத்தியவர்களில் ஒருவரும், பூவுலகின் நன்பர்கள் அமைப்பின் உறுப்பினருமான பிரபாகரன் வீர அரசு கூறியதாவது, ”நிலக்கரி மாசுபாட்டால் ஏற்படும் அகால மரணங்கள் டெல்லி, மும்பை, பெங்களூருவை விட சென்னையில்தான் அதிகம்.

மேலும், சென்னையின் பல பகுதிகளில், உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த அளவை விட, நான்கு மடங்கு நுண்துகள்களின் அளவு அதிகமாக உள்ளது. இதனால், சென்னை போன்ற நகரங்களில் ஆயுட்காலம் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை குறைவதாக AQLI ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

கவனிக்குமா அரசு?

சென்னை, கடலூர், தூத்துக்குடி, மேட்டூர் ஆகிய நகரங்களில் காற்று மாசுபாட்டைக் குறைக்க பல்வேறு துறை சார்ந்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் உடனடி தேவையாக உள்ளது. காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்காக அரசாங்கங்கள் செய்யும் செலவு உண்மையில் பெரிய பொது சுகாதாரத்திற்கான முதலீடாகும். இந்த யோசனையின் அடிப்படையில், நமது அரசாங்கங்களின் தீர்வு காற்று மாசுபாட்டைக் குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

ஐபிசிசியின் பல அறிக்கைகளின்படி, மனித செயல்பாடு புவி வெப்பமடைதலுக்கு வழிவகுக்கிறது. அனல் மின் நிலையங்கள் புதைபடிவ எரிபொருளைப் பயன்படுத்துவதால், பசுமை இல்ல வாயுக்கள் வெளியேறி (Greenhouse Gas), பருவநிலை மாற்றத்தின் தீவிரத்துக்கு வழிவகுக்கும் என்றும் அறிக்கைகள் கூறுகின்றன.

பூவுலகின் நண்பர்கள்
பூவுலகின் நண்பர்கள்

உலகெங்கிலும், புதைபடிவ எரிபொருள்களிலிருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், புதிய அனல் ஆலைகளைத் திறப்பதில் இந்தியா ஆர்வம் காட்டுவது, வழக்கற்றுப் போனவற்றை மூட மறுப்பது, அதிக மாசுபடுத்தும் அனல் ஆலைகளைக் கண்காணிக்கத் தவறியது, மாசுபாட்டைக் குறைப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்தது ஆகியவை அழிவுப் பாதையில் பயணிப்பதற்குச் சமம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காற்று மாசால் பெரும் பாதிப்புகளை எதிர்கொள்ள காத்திருக்கும் சென்னை - சி40 எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.