வேலூர்: எஸ்.எஸ்.கே.மானியம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மகன் சீனிவாசன் (வயது 42). இவர் அந்த பகுதியில் உள்ள டீக்கடையில் பணியாற்றி வந்தார். சீனிவாசன் நேற்று(ஜன.26) மாலை வீட்டின் அருகே உள்ள பெட்டிக்கடைக்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது அங்குள்ள மரத்தின் அருகே அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சீனிவாசன் (40) என்பவர் குடிபோதையில் அந்த வழியாக சென்றவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாகவும், அதைக்கண்ட சீனிவாசன் குடித்துவிட்டு ஏன் தகராறில் ஈடுபடுகிறாய் என்று கேட்டதாகவும் கூறப்படுகிறது.
அதனால் கோபமடைந்த முருகேசன் மகன் சீனிவாசன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சீனிவாசனை பலமாக குத்தியதில் சீனிவாசன் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
இதையடுத்து முருகேசன் மகன் சீனிவாசன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். தகவலறிந்த உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்ஜான், தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறாய்விற்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த முருகேசன் மகன் சீனிவாசனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தமிழனாக இருந்தும் தமிழ்த்தாயை மதிக்க மறுப்பவர்களை என்ன செய்வது ? - ராமதாஸ் வேதனை