ETV Bharat / city

சிறப்பு குறைதீர் முகாம்: நலத்திட்ட உதவிகள் வழங்கிய கே.சி. வீரமணி! - minister K C Veeramani attends welfare program in Vellore

வேலூர்: அதிமுத அரசு செயல்படுத்தும் திட்டங்களில் பயனடைந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் கே.சி. வீரமணி உரையாற்றினார்.

minister K C Veeramani attends welfare program in Vellore
minister K C Veeramani attends welfare program in Vellore
author img

By

Published : Dec 21, 2019, 5:34 AM IST

வேலூர் அருகே தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகவரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி கலந்துகொண்டு 3,400 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது பேசிய அமைச்சர், தமிழ்நாட்டிலேயே வேலூர் மாவட்டத்தில் தான் 55,000 பயனாளிகள் முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளைக் கேட்டு மனு அளித்தனர். அவர்களில் சுமார் 32,000 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டு அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களின் மனுக்களை பரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

நலத்திட்ட உதவிகள் வழங்கிய கே.சி. வீரமணி

கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்து அதை நடைமுறைப்படுத்தி வருகிறது. பெண்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் தாலிக்குத் தங்கம், கல்வி கற்கும் பெண்களுக்கு 14 வகையான உபகரணங்கள் வழங்கி தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே தமிழ்நாடு அரசு பெண்களுக்காகக் கொண்டுவரும் பல்வேறு திட்டங்களை பயன்படுத்திக்கொண்டு பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையவேண்டும்’ என்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: கள்ளிக்குடி வாக்கு எண்ணும் மையத்தில் வழக்குரைஞர் இருக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி!

Intro:வேலூர் மாவட்டம்

அரசு செயல்படுத்தும் திட்டங்களில் பயனடைந்து வாழ்க்கையில் முன்னேறவேண்டும் - பெண்களுக்கு அமைச்சர் கே சி வீரமணி அறிவுரைBody:வேலூர் அருகே  இன்று முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது இதில் தமிழக வணிகவரித்துறை அமைச்சர் கே சி வீரமணி கலந்துகொண்டு 3,400 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர், தமிழகத்திலேயே வேலூர் மாவட்டத்தில் தான் 55,000 பயனாளிகள் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கேட்டு மனு அளித்தனர் அவர்களில் சுமார் 32,000 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டு அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மீதமுள்ளவர்களின் மனுக்களை பரிசீலனை செய்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது தமிழகம் வளர்ச்சி அடைந்த மாநிலமாக திகழ்வதால் பல்வேறு திட்டங்களை தீட்டி தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது குறிப்பாக கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து அதை நடைமுறைப்படுத்தி வருகிறது பெண்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் தாலிக்கு தங்கம் மற்றும் கல்வி கற்கும் பெண்களுக்கு 14 வகையான உபகரணங்கள் வழங்கி தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே தமிழக அரசு பெண்களுக்காக கொண்டுவரும் பல்வேறு திட்டங்களை பயன்படுத்திக்கொண்டு பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.