தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், பல்வேறு துறை சார்ந்த செயல்பாடுகள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் வேலூர் மாவட்டத்திலும் கரோனா தொற்று வெகுவாக அதிகரித்து வருகிறது.
இச்சூழலில், கரோனா அச்சத்தால் வேலூர், அதன் சுற்று வட்டாரப்பகுதிகளிலிருந்து செல்லக்கூடிய பேருந்து பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், தாம்பரம் ஆகிய ஊர்களுக்குச் செல்லக்கூடிய வேலூர் மண்டலத்திற்குட்பட்ட அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான 40 பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இதே போன்று பயணிகளின் பயண எண்ணிக்கை தொடர்ந்து குறையும் பட்சத்தில், மேலும் பேருந்துகள் நிறுத்தப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'நாளை தொடங்குகிறது மீன்பிடி தடை காலம்!'