ETV Bharat / city

பள்ளி மாணவியுடன் செல்ஃபி எடுத்தவர் போக்சோவில் கைது! - slander on whats app youth arrest

திருச்சி: பள்ளி மாணவியுடன் எடுத்த செல்ஃபியை வாட்ஸ்அப்பில், தனது சுயவிவரப் படமாகப் பதிவிட்ட இளைஞரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

school-girl-slander-on-whats-app
school-girl-slander-on-whats-app
author img

By

Published : Aug 25, 2020, 8:21 AM IST

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி உப்பிலியப்பட்டியைச் சேர்ந்தவர் தினேஷ். ஆட்டோ ஓட்டுநரான அவருக்கு அதேபகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவிக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 15 நாள்களாக மாணவி தினேஷூடன் பேசாமல் இருந்து வந்துள்ளார்.

அதனால் ஆத்திரமடைந்த தினேஷ் மாணவியுடன் எடுத்த செல்ஃபி ஒன்றை வாட்ஸ்அப்பில், தனது சுயவிவரப் படமாகப் பதிவிட்டுள்ளார். அதனைக் கண்ட மாணவியின் பெற்றோர் சமூக வலைதளங்களில், தங்களது மகளை அவதூறுபடுத்துவதாக தினேஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிந்த காவல் துறையினர் தினேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆசைகாட்டி 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.