ETV Bharat / city

விருப்ப மனு அளிக்கவந்த உறுப்பினர்கள் - கூட்டத்தைக் கண்டு திரும்பிய கே.என். நேரு

author img

By

Published : Jan 12, 2022, 4:30 PM IST

Updated : Jan 12, 2022, 4:42 PM IST

திருச்சி கலைஞர் அறிவாலயத்திற்கு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்களின் விருப்ப மனு வாங்க வந்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு கூட்டத்தைக் கண்டு பத்தே நிமிடத்தில் பறந்து சென்றார்.

அமைச்சர் கே.என்.நேரு
அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கும் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கடந்த ஜனவரி 10ஆம் தேதி நடக்கவிருந்தது. அக்கூட்டத்தில் பங்கேற்கவிருந்த கே.என். நேருவின் வருகை தாமதமானதால் கூட்டத்தின் தேதி இன்று (ஜனவரி 12) மாற்றிவைக்கப்பட்டது.

இந்நிலையில், விருப்பமனு தர வந்த கழக நிர்வாகிகள் தங்களின் இருப்பைக் காட்டிக்கொள்ள கூட்டமாக வந்தனர். இன்று காலை 9 மணிக்கு திமுக கழக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு கலைஞர் அறிவாலயத்திற்கு வந்தனர்.

விருப்ப மனு அளிக்க வந்த உறுப்பினர்கள்

பின்னர், திருச்சி மத்திய, வடக்கு மாவட்டத்தில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளிடமிருந்து வேட்புமனுக்களை நேரில் பெற்றுக்கொண்டனர். அப்பொழுது அனைவரும் ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு கூட்டமாக வந்தனர். இதில் அரண்டுபோன கே.என். நேரு, விறுவிறுவென நடையைக் கட்டியதுடன், தனி அறையில் வந்து அமர்ந்துகொண்டு முக்கிய நிர்வாகிகளை மட்டும் சந்தித்து விடை பெற்றார்.

இக்கூட்டத்திற்கு வருகைதந்த கே.என். நேரு 10 நிமிடத்தில் சென்றது கழக உறுப்பினர்களுக்கிடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: பொங்கலை முன்னிட்டு போக்குவரத்து கழகப் பணியாளர்களுக்கு ‘சாதனை ஊக்கத்தொகை’

Last Updated : Jan 12, 2022, 4:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.