திருச்சி: பலமுனைப் போட்டிகளுக்குப் பிறகு அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு, நெருங்கிய நண்பராகவும் விசுவாசியாகவும் விளங்கிய 32ஆவது வார்டு திமுக பிரதிநிதியான தனுஷ்கோடியின் மனைவி திவ்யா (28) என்பவரை மாநகராட்சியின் துணை மேயர் பதவிக்கு திமுக தலைமை அறிவித்துள்ளது.
தொலைதூரக் கல்வியில் பயின்று பி.காம் பட்டம் பயின்று வருகிறார், திவ்யா. அத்துடன் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் இணைந்து கட்சிப் பணியாற்றி வருகிறார். திருச்சியில் தனக்கு வார்டு ஒதுக்கப்படாததால் தன்னுடைய மனைவிக்கு சீட்டை பெற்றுத் தந்ததோடு, எதிர்த்துப்போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுடைய டெபாசிட்டையும் காலி செய்யும் முனைப்பில் பணி செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளார், திவ்யாவின் கணவர் தனுஷ்கோடி.
திகைப்பில் திருச்சி திமுக
ஆண்களில் மதிவாணன், மண்டி சேகர் என்றும்; பெண்களில் சுஜாதா, விஜயா ஜெயராஜ் எனப் பல பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில், 33ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திவ்யாவை திருச்சி மாநகராட்சி துணை மேயர் பதவிக்கு திமுக தலைமை அறிவித்துள்ளது அப்பகுதியிலுள்ள திமுகவினரையே சற்று திகைக்க வைத்துவிட்டது எனலாம்.
இதையும் படிங்க: மாநகராட்சிகளுக்கான திமுக மேயர், துணை மேயர் வேட்பாளர்கள் அறிவிப்பு