ETV Bharat / city

மேகதாது விவகாரத்தில் திமுக ஆட்சி விடியல் தருமா? டிடிவி தினகரன் கேள்வி

author img

By

Published : Mar 14, 2022, 5:12 PM IST

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு, மத்திய அரசு அனுமதி தரக்கூடாது என வலியுறுத்தி அமமுக பொதுச்செயலாளர் TTV தினகரன் தலைமையில் திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திரா காந்திக்கு அஞ்சிக் கொண்டு கலைஞர் அவரது ஆட்சியில் உச்ச நீதிமன்றத்தில் இருந்த வழக்கைத் திரும்பப் பெற்றுவிட்டு, காவிரி விவகாரத்தில் பொது மக்களை வஞ்சித்துள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

திருச்சி: மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு, மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என வலியுறுத்தி அமமுக பொதுச்செயலாளர் TTV தினகரன் தலைமையில் சிந்தாமணி அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்டச் செயலாளர் மனோகரன், ராஜசேகரன், சாருபாலா தொண்டைமான் உள்ளிட்ட அமமுக நிர்வாகிகள் மற்றும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேகதாது விவகாரத்தில் வஞ்சனை

இக்கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசுகையில், 'நமது பொது மக்களின் பிரச்னை; காவிரி பிரச்னை மட்டுமல்ல. இதில் இதர மாவட்டங்களின், குடிநீர் பிரச்னையும் அடங்கியிருக்கிறது. கர்நாடகா, உச்ச நீதிமன்றத்தை மதிப்பதில்லை. ஒரு எதிர்ப்பான ஆட்சியை தெளிப்பான் ஆட்சியை செய்துவருகிறது. உச்ச நீதிமன்றத்தை மதிக்காமல் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அண்டை மாநிலமான கர்நாடகா, தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் அளவிற்குத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இதை மத்திய அரசாங்கம் முடிவிற்குக் கொண்டுவர வேண்டும்.

திருச்சி ஆர்ப்பாட்டத்தில் பேசிய டிடிவி தினகரன்

தமிழ்நாட்டை ஆளுகின்ற திமுகவும், மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு அணை கட்டும் எண்ணத்தையே முழுமையாக அழிக்க வேண்டும். கலைஞர் ஆட்சியில் இருக்கும்போது, கிளைமா வகையில் அணை கட்டுவதற்கு எந்தவித மறுப்பும் கிடையாது என்று பச்சைக்கொடி காட்டினார். அப்போது இருந்த இந்திரா காந்திக்கு அஞ்சிக்கொண்டு உச்ச நீதிமன்றத்தில் இருந்த வழக்கைத் திரும்பப் பெற்றார். திமுக அரசு பொதுமக்களை வஞ்சித்து வருகிறது.

கர்நாடகாவிற்கு நாம் பாகிஸ்தான்

தமிழ்நாட்டில் 85% குடிநீர் பிரச்னையைத் தீர்ப்பது, காவிரித்தாய். தமிழ்நாட்டுப் பிரச்னையில் திமுக எப்போதும் கோட்டைவிட்டு விடும். அணையைக் கட்ட அனுமதித்துவிட்டால், தமிழ்நாடு சோமாலியா போல் ஆகிவிடும். விடியல் ஆட்சி குடும்பத்திற்கு மட்டும் விடியல் ஆட்சியாக இல்லாமல் தமிழ்நாடு மக்களுக்கும் விடியல் ஆட்சியாக இருக்க வேண்டும்.

கர்நாடக அரசாங்கம், நமது மக்களைப் பாகிஸ்தான் போல நடத்துகிறது. மேலும், மத்திய அரசு, கர்நாடக அரசுக்கு அணைகட்டும் திட்டத்தை விட்டுவிட்டு காடுகளை வளர்ப்போம் திட்டத்தைத் தொடங்க வலியுறுத்த வேண்டும். நீர் ஆதாரத்தைப் பெறுவதற்குக் காடுகளை வளர்க்க வேண்டும். வெற்றி பெற்றுள்ள திமுகவினர் பேரூராட்சியில் இருந்து மாநகராட்சி வரை எந்த மாதிரியான தவறு செய்யப் போகிறார் என்று தெரியவில்லை.

திராவிட ஆட்சியில் தில்லுமுல்லு

10 மாதங்களில் பொதுமக்களுக்கு விடியல் ஆட்சி அல்ல, திமுகவினருக்கு விடியல் காட்சி. இது திராவிட ஆட்சியா? இல்லை தில்லுமுல்லு ஆட்சியா? நீட் தேர்வு ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களைப் புரட்சித்தலைவி அம்மா தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கவில்லை. அமமுக எதிர்க்கட்சியும் அல்ல; ஆளுங்கட்சியும் அல்ல. ஆனால், பொதுமக்களுக்கு என குரல் கொடுக்கும் முதல் கட்சி. அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வர செயல்படுவோம்' என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: விழிப்புணர்வு 'விதை திருவிழா': அழிந்துவரும் இயற்கை வேளாண்மை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.