திருச்சி: பெண்களுக்குத் தொடர் பாலியல் சீண்டல்கள் கொடுத்து வந்த சிறுகனூர் காவல் ஆய்வாளர் மணிவண்ணனுக்கு கட்டாய ஓய்வு அளித்து திருச்சி காவல் சரக துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
சிறுகனூர் காவல்நிலைய ஆய்வாளராக இருந்தவர், மணிவண்ணன். இவர் இதற்கு முன்பு பணிபுரிந்த காவல் நிலையங்களில் புகார் கொடுக்க வரும் பெண்களிடம் நள்ளிரவு நேரத்தில் அல்லது தனியே சென்று விசாரணை என்கிற பெயரில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து காவல் உயர் அலுவலர்களுக்குத் தொடர்ந்து புகார் வந்ததுள்ளது. அதேபோல் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர்களிடமும் அநாகரிகமாக பேசுவதாகப் புகார் எழுந்தது.
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை அடைத்துவைத்து 3 மாதம் பாலியல் தொல்லை
திருச்சி மாநகரம், பொன்மலை காவல் நிலைய ஆய்வாளராக இருந்தபோது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் படிப்பு படிக்க வந்த இலங்கை பெண்ணின் விசா சம்பந்தமான பிரச்னையில் நேரடியாக வீட்டிற்குச் சென்று, தவறாக நடக்க முயற்சி செய்தது பெரிய பிரச்னையாக மாறியது. இதனால் அவர் பெரம்பலூர் மாவட்டத்திற்குப் பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.
பெரம்பலூரில் பணியாற்றியபோது, அங்கு புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் நள்ளிரவு 12 மணிக்கு தொடர்புகொண்டு தொடர்ச்சியாக விசாரணை என்கிற தொனியில் பேசியதும்; பயந்துபோன அந்த பெண், திருச்சி காவல் சரக துணைத் தலைவர் (டிஐஜி) பாலகிருஷ்ணனிடம் புகார் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்த நபர் போக்ஸோவில் கைது!
இதுகுறித்து நீதி விசாரணை மேற்கொள்ள அவர் உடனடியாக உத்தரவிட்டார். விசாரணையில் மணிவண்ணன் தொடர்ந்து ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து மணிவண்ணனை கட்டாய பணி ஓய்வில் செல்ல உத்தரவிட்டார், பாலகிருஷ்ணன்.
பின், கட்டாய ஓய்வில் செல்வதற்கான உத்தரவு நகல் மணிவண்ணனுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.