ETV Bharat / city

திருச்சியில் 29 ஆண்டுகளுக்கு முன் திருடுபோன சிலைகள் மீட்பு: டிஜிபி பாராட்டு - தனிப்படை காவல்துறை

திருச்சி அருகே 29 ஆண்டுகளுக்கு முன் திருடுபோன சிலைகளை மீட்ட சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவின் தனிப்படை காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு
டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு
author img

By

Published : Dec 23, 2021, 12:42 PM IST

திருச்சி: டிவிஎஸ் டோல்கேட் பகுதியிலுள்ள மத்திய மண்டல ஐஜி அலுவலகத்தில், தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு நேற்று (டிசம்பர் 22) செய்தியாளரைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "2017ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பல்வேறு மாவட்டங்களிலிருந்த அனைத்து சிலைத் திருட்டு வழக்குகளும், சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. அவ்வாறு மாற்றம் செய்யப்பட்டபோது, சில வழக்கு கோப்புகள் காணாமல்போனதாகப் புகார் எழுந்தது.

வழக்கின் கோப்புகள் தொலைந்தும் நடவடிக்கை

அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி காவல் நிலைய குற்ற எண் 192 / 1992 வழக்கு கோப்பு எங்குத் தேடியும் கிடைக்காத காரணத்தால், சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவில் கோயில் அர்ச்சகரிடம் புதிதாகப் புகார் பெற்று புதிய வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

கோப்பு கிடைக்காமல் புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட இந்த வழக்கில், தனிப்படை அமைக்கப்பட்டது.

மீட்கப்பட்ட சிலைகள்
மீட்கப்பட்ட சிலைகள்

தனிப்படைக்கு பாராட்டு

தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு கூறுகையில், தனிப்படை காவல் துறையினரின் கடுமையான முயற்சியில், 29 ஆண்டுகளுக்கு முன் சந்நியாசி பணங்குடி தாளரனேசுவரர் கோயிலில் திருடுபோன ஆடிப்பூர அம்மன் உலோகச் சிலை, அந்தக் கோயில் வழிபாட்டில் இருந்த விநாயகர் உலோகச் சிலை கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளன.

அவை 29 ஆண்டுகளுக்குப் பின் மீட்கப்பட்டுள்ளன. அதற்குக் காரணமாக இருந்த தனிப்படை காவல் துறையினருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

மேலும், மீட்கப்பட்ட சிலைகள் விலை மதிப்பிட முடியாதவை. பல கோடி ரூபாய் இருக்கும். இதுபோல் காணாமல்போயுள்ள சிலைகளை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: நகைகள் ஜாக்கிரதை: தமிழ்நாடு காவல்துறையின் விழிப்புணர்வு வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.