விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுங்கள் என்று முதலமைச்சரையும், அரசியல் கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து வலியுறுத்துவதற்காகத் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு சென்னை சென்றுள்ளார்.
திருச்சி சந்திப்பு தொடர்வண்டி நிலையத்தில் அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘உச்ச நீதிமன்றமே கடன் தள்ளுபடி செய்யக் கூறியும், இதுவரை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுக்கிறார் என்றும், விவசாயிகளின் குறைகளைக் கேட்கவும் சந்திக்கவும் மறுக்கிறார் எனவும் குற்றஞ்சாட்டினார்.
கிரீடத்தைத் திருடும் முன்பு துர்கை அம்மனிடம் மன்னிப்பு கேட்ட விநோத திருடன்!
தொடர்ந்து பேசிய அவர், தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராடியபோது நேரில் சந்தித்து விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தையும் செய்து தருவதாக உறுதி கூறினார். ஆனால் இன்று வரை எதையுமே நிறைவேற்றவில்லை. எனவே விவசாயிகளைத் தற்கொலையில் இருந்து காப்பாற்றுங்கள் என்று முதலமைச்சரையும், அரசியல் கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து வலியுறுத்தவுள்ளேன்’ என்று கூறியுள்ளார்.