தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு காலம் சார்ந்த பதவி உயர்வு, ஊதியம் ஆகியவை வழங்க வேண்டும், அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவ கல்வியில், ஏற்கனவே இருந்த 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
#SaveSujith மீண்டு வா சுஜித்! - முதன்மை தகவல்கள்
அதன் ஒரு பகுதியாக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மருத்துவர்கள், நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 54 மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர். இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.