2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ள கட்சிகளுக்கான சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கிவருகிறது. அதன்படி, நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு குக்கர் சின்னம். மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதுச்சேரியில் மட்டும் டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழ்நாட்டில், மக்கள் நீதி மய்யத்திற்கு எந்தச் சின்னமும் இதுவரை ஒதுக்கப்படவில்லை. மாறாக தமிழ்நாட்டில் டார்ச்லைட் சின்னம் எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கு கமல்ஹாசன் கடும் அதிருப்தி தெரிவித்த நிலையில், அவர் பங்குபெற்ற தூத்துக்குடி தேர்தல் பரப்புரை கூட்டங்களில், இடம்பெற்ற அனைத்து சுவரொட்டிகள், பதாகைகள், பேனர்களில் டார்ச்லைட் சின்னம் அச்சிடப்பட்டிருந்தது.
இது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. டார்ச்லைட் எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் மக்கள் நீதி மய்யம் அதனைப் பயன்படுத்தி, சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: 'ஈகோவை விட்டுவிட்டு ரஜினியுடன் இணைந்து செயல்படத் தயார்'- கமல் ஹாசன்