தூத்துக்குடியில் இரு மாதங்களுக்கு முன் பலத்த மழை பெய்தது. கால்டுவெல் காலனி 2வது, 3வது தெருவில் தேங்கிய மழை நீர் வடியாமல் உள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து புகார் அளிக்க அப்பகுதி மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது;
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பெய்த மழையில், கால்டுவெல் காலனி 2வது, 3வது தெருக்களில் மழைநீர் இடுப்பு அளவுக்கு தேங்கி நின்றது. மாநகராட்சி ஊழியர்கள் மின் மோட்டார்கள் பொருத்தி மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. மழை நீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. இதனால் முதியவர்கள் பெண்கள் உள்ளிட்டோர் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே தேங்கிய மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: தாய்ப்பால் வங்கியை தொடங்கி வைத்த அமைச்சர் கடம்பூர் ராஜூ