தூத்துக்குடி அடுத்த மாப்பிள்ளையூரணி ஊராட்சியின் கீழஅழகாபுரி கிராமத்தில் அழகு முத்தாரம்மன் ஆலய திருவிழாவையொட்டி, இன்று (செப்.18) நடந்த மாட்டு வண்டிகள் பந்தயத்தை எம்எல்ஏ சண்முகையா தொடங்கி வைத்தார்.
பெரிய மாட்டு வண்டி, சிறிய மாட்டு வண்டி மற்றும் பூஞ்சிட்டு மாட்டு வண்டிகள் என மூன்று பிரிவுகளாக நடந்த இப்போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 80 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதைத் தொடர்ந்து போட்டியில் கலந்து கொண்ட மாட்டு வண்டிகள் இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்தன.
பெரிய மாட்டு வண்டி போட்டிக்கு 10 கிமீ தூரமும் சிறிய மாட்டு வண்டி போட்டியில் 8 கிமீ தூரமும் பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் 6 கிமீ தூரமும் போட்டி என நடைபெற்றதில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த மாட்டு வண்டி போட்டிகளில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், ஊராட்சி கவுன்சிலர் பாரதிராஜா, கோயில் நிர்வாகிகள் மாடசாமி, ஜெயமுருகன், முத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சாலைகளில் இருபுறங்களில் நின்று போட்டிகளை ரசித்தனர்.
இதையும் படிங்க: மீண்டு(ம்) நடிக்க வருகிறார் மக்கள் நாயகன் ராமராஜன்