தூத்துக்குடி: தேர்தல் நடத்தும் அலுவலர் தாமதமாக வந்ததால், மறைமுகத் தேர்தல் நடைபெறுவதில் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 16ஆவது வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் 2019 டிசம்பர் 30ஆம் தேதி நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக 8 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக தலா ஒரு இடங்களும், அதிமுக 5 இடங்களும், சுயேச்சைகள் 4 இடங்களும் பெற்றனர்.
இவ்வேளையில் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் இன்று காலை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வீதி மீறல் : தரைமட்டமாக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள்!
காலை 10 மணியளவில் 19 வார்டு உறுப்பினர்களும் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்குக்கு வந்தனர். அவர்களிடம் வருகை பதிவேட்டில் கையெழுத்து பெறப்பட்டது. ஆனால் பகல் 12 மணிவரை கூட்டுறவுச் சங்க துணைப் பதிவாளரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜெயசீலன் வரவில்லை. இதனால் சுமார் இரண்டு மணி நேரம் கூட்ட அரங்கிலேயே உறுப்பினர்கள் காத்திருந்தனர்.
வெளியே காத்திருந்த அதிமுக, திமுக கூட்டணி கட்சிகளின் தொண்டர்களிடையே யார் வெற்றி பெற்றார்கள் என பெரிய விவாதம் நடந்துகொண்டிருந்தது. இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.