தூத்துக்குடி: வாகைக்குளம் விமான நிலையத்திற்கு வருகை தந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கொலை, கொள்ளை குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
இது மிகுந்த வேதனையளிக்கிறது. கொலை எண்ணிக்கையை காவல் துறை உயர் அதிகாரிகள் வெளியே குறைத்து சொல்கிறார்கள். அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே கொலை, கொள்ளை குற்றங்களை குறைக்க முடியும் என தெரிவித்தார். மேலும், தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை சமர்பித்துள்ளார்.
நான்கு மாதங்கள் ஆகியும் அறிக்கையை அரசு வெளியிடாத காரணத்தால் தற்போது கசிய விடப்பட்டுள்ளது. ஆனால், காவல்துறை உயர் அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்க அவர்கள் வேறு இடத்தில் பணி உயர்வு பெற்று பணியாற்றி வருகிறார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும் என நாம் தமிழர் சீமான் எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: 'எனது கட்சியின் பெயரை ஜம்மு காஷ்மீர் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்' - குலாம் நபி ஆசாத்