ETV Bharat / city

ரெய்டு மூலமாக எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தும் பாஜக - கனிமொழி எம்பி - திமுக கூட்டணி

தூத்துக்குடி: வருமான வரித்துறை சோதனை மூலமாக எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தும் பணியை பாரதிய ஜனதா கட்சி செய்கிறது எனக் கனிமொழி எம்பி குற்றஞ்சாட்டியுள்ளார்.

kanimozhi
kanimozhi
author img

By

Published : Mar 18, 2021, 10:43 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சீனிவாசன் தேர்தல் நடத்தும் அலுவலரான சங்கரநாராயணனிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல்செய்தார். உடன் கனிமொழி எம்பி இருந்தார்.

கனிமொழி எம்பி செய்தியாளர் சந்திப்பு
இதனைத் தொடர்ந்து கனிமொழி எம்பி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

வருமானவரித் துறை சோதனை மூலமாக எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தும் பணியை பாரதிய ஜனதா கட்சி செய்துவருகிறது. வேட்பாளர்களை அச்சுறுத்துவது தேர்தல் வெற்றிக்கான வழி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் திமுக, அதன் கூட்டணிக் கட்சியினர் பயப்படப் போவதில்லை.

தேர்தல் வெற்றி என்பது திமுக கூட்டணிக்குத்தான் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டுவந்தபோது திமுக, அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன.

ஆனால் அதனை ஆதரித்து வாக்களித்த அதிமுக இன்று தேர்தல் வந்துவிட்டது என்பதற்காக மக்களை ஏமாற்றிவிடலாம், சிறுபான்மையின மக்களை ஏமாற்றிவிடலாம் என்ற ஒரே காரணத்திற்காக குடியுரிமை திருத்தச் சட்டத்தினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அதிமுக கூறுகிறது. உண்மையிலே எதிர் கருத்து இருந்தால் எதிர்த்து வாக்களித்து இருக்கலாம். தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி தந்து இருக்கக்கூடிய இயக்கம் திமுக. ‌உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சி மூலமாக மக்களின் கோரிக்கை மனுக்களை மு.க. ஸ்டாலின் பெற்றிருக்கிறார். அந்தக் கோரிக்கைகளை 100 நாள்களில் நிறைவேற்றித் தருவேன். அதற்காக தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

எல்லாக் கோரிக்கைகளும் நிச்சயமாக நிறைவேற்றப்படும். எத்தனையோ முறை திமுக ஆட்சியில் இல்லாதபோது அடக்குமுறைகளை, ‌ கைது நடவடிக்கைகளை, அச்சுறுத்தல்களை, வழக்குகளை சந்தித்து இருக்கக்கூடிய இயக்கம்தான் திமுக. திமுகவின் அடி தொண்டர்கள்தான் யாரிடமும் விலை போகமாட்டார்கள். உறுதியாக நிற்கக் கூடியவர்கள் திமுகவினர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நேயாவை பாதுகாத்து வையுங்கள் - அவர் பேரன்பின் அடையாளம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.