ETV Bharat / city

ஆட்டோமேஷனை காரணம் காட்டி 541 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சொமேட்டோ நிறுவனம்! - 9 old doctorate kid

டெல்லி: முன்னணி உணவு சேவை நிறுவனமான சொமேட்டோ தானியங்கி தொழில்நுட்ப வளர்ச்சியை காரணம் காட்டி 541 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

Zomato
author img

By

Published : Sep 7, 2019, 11:22 PM IST

நாடு முழுவதும் பொருளாதார மந்தநிலை தீவிரமடைந்து வருவதால் தொழிற்துறையில் பெரும் முடக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் வேலையிழப்பும், உற்பத்தியில் தேக்க நிலையும் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் முன்னணி உணவு சேவை நிறுவனமான சொமேட்டோ, தானியங்கி தொழில்நுட்பமான ஆட்டோமேஷனை காரணம் காட்டி தன்னிடம் வேலை செய்யும் 541 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது. அதேசமயம் வேலையிழந்த ஊழியர்களின் நலன் கருதி இரு மாத சம்பளத்தை அளிப்பதாக அந்நிறுவமன் உறுதியளித்துள்ளது.

பொருளாதார மந்தநிலை காரணமாக ஏற்கனவே இந்தியாவில் வேலையிழப்பு அதிகரித்து வரும் நிலையில், செலவு குறைப்பைக் காரணம் காட்டி சோமேட்டோ நிறுவனம் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Intro:31 உலக சாதனைகள் செய்து ஒன்பது வயதில் முனைவர் பட்டம் பெற்ற சிறுமி.Body:31 உலக சாதனைகள் செய்து ஒன்பது வயதில் முனைவர் பட்டம் பெற்று நெல்லைக்கு மேலும் ஒரு பெருமை சேர்த்த சிறுமி...யார் இந்த சிறுமி என்பது குறித்த சிறப்பு தொகுப்பினை தற்போது காணலாம்...

நெல்லைக்கு என்று பல பெருமைகள், பல சிறப்புகள் உள்ளன அவற்றுடன் மேலும் ஒரு பெருமையாக வளர்ந்துள்ளார் யோக ராணி, யோக கலா, யோக ஸ்ரீ, முனைவர் பிரிஷா.

நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் உள்ள கார்த்திகேயன் தேவிபிபிரியா தம்பதியினரின் மகள் பிரிஷா, தனது ஒன்பது வயதில் உலகிலேயே அதிக உலக சாதனை செய்து கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார் இந்த சிறுமி. இவரது தாய் மற்றும் பாட்டி மூலம் தனது வாழ்வில் யோகா பயணத்தை தொடங்கிய இவர் கண்டபேருண்டாசனத்தை 1 நிமிடத்திற்கு 16 முறை செய்தல், லிங்காசனம், வாம தேவ ஆசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்கள் செய்வதில் உலக அளவில் சாதனை படைத்துள்ளார் சிறுமி பிரிஷா.

இதுவரை 31 உலக சாதனை செய்த பிரிஷா மேலும் பல உலக சாதனைகளை நிகழ்த்தவுள்ளார். இந்தியா மட்டுமின்றி மலேசிய மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளிலும் பல சாதனைகளை நிகழ்த்தி உள்ளார். யோகா மட்டுமின்றி கராத்தே, நீச்சல் போட்டி, ஓவியம் போன்ற பல துறைகளிலும் தனது திறமையை பதித்து வருகிறார் பிரிஷா. இவைகள் போதாது என்று மேலும் பல வகுப்புகளுக்கு தன்னை சேர்த்துவிடுமாறு பிரிஷா மிகுந்த ஆர்வத்துடன் கூறுவதாக சொல்கிறார் பிரிஷாவின் தாய் தேவிபிரியா.

பிரிஷா தனக்கு தெரிந்த இந்த யோகா கலையினை பல கிராமங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சென்று இலவசாமாக அங்குள்ள மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கின்றார். கண்பார்வை இல்லாதவர்கள், மாற்றுத்திறனாளிகள் மத்தியில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி யோகா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு அவர்களுக்கு தேவையான யோகாசனங்கள், யோக முத்திரைகள் கற்றுக்கொடுத்து வருகிறார். தினமும் யோகா செய்வதினால் தங்களது கவனிக்கும் திறன் போன்றவை அதிகரித்துள்ளதாகவும் தங்களது கண்பார்வை திறனும் அதிகரிப்பதாகவும் கூறுகின்றனர் மாற்றுத்திறனாளி மாணவர்கள்.

விரைவில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களை தத்தெடுத்து அங்கு வசிக்கும் மக்களிடையே உணவு வகைகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மக்களுக்கு யோகா பயிற்சியளிக்கவும் உள்ளதாக கூறுகின்றனர் பிரிஷா மற்றும் அவரது பெற்றோர். இடிவி பாரத் செய்திகளுக்காக நெல்லையில் இருந்து கருப்பசாமி.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.