Tirunelveli Students Death: திருநெல்வேலி டவுண் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான சாஃப்டர் பள்ளி கழிப்பறை சுவர் இடிந்து மூன்று மாணவர்கள் டிசம்பர் 17ஆம் தேதி அன்று உயிரிழந்தனர்
மாணவர்களின் மரணம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி தலைமையாசிரியர் ஞான செல்வி, தாளாளர் சாமுவேல் செல்வகுமார், கட்டட ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் கைதான மூவருக்கும் நிபந்தனை பிணை வழங்கி திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற (பொறுப்பு) நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் திருநெல்வேலி நடுவர் நீதிமன்றத்தில் (எண் 4) மாலை 5 மணிக்கு கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: யூ-ட்யூபர் மாரிதாஸூக்கு நிபந்தனைப் பிணை வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்!