திருநெல்வேலி டவுன் பகுதியில் அரசு உதவிபெறும் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்த பள்ளியில் டிசம்பர் 17ஆம் தேதி காலை பள்ளியின் கழிவறை தடுப்புச் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் மாணவர்கள் விஸ்வரஞ்சன், அன்பழகன், சுதிஸ் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர்.
நான்கு மாணவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் செல்வகுமார், தலைமை ஆசிரியை ஞானசெல்வி, கட்டட ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், தலைமை ஆசிரியை ஞானசெல்வி உடல்நலக்குறைவு காரணமாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: பள்ளி விபத்து எதிரொலி: புதுக்கோட்டையில் 100 பள்ளிக் கட்டடங்களை இடிக்க ஆட்சியர் அதிரடி