ETV Bharat / city

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தனியார் பீடி நிறுவன ஊழியர் உயிரிழப்பு

மேலப்பாளையம் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தனியார் பீடி நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.

ஷேக் முஹம்மது  திருநெல்வேலி மாவட்ட செய்திகள்  தனியார் பீடி நிறுவன ஊழியர்  தாமிரபரணி  Nellai Beedi worker drown in thamirabarani river  Beedi worker drown in thamirabarani river  thamirabarani river  Tirunelveli latest news

author img

By

Published : Apr 12, 2021, 6:43 AM IST

திருநெல்வேலி: மேலப்பாளையம் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தனியார் பீடி நிறுவன ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஷேக் முஹம்மது (40), இவர் அங்குள்ள ஒரு தனியார் பீடி நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். இந்நிலையில், தனது நண்பர்களுடன் மேலநத்தம் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக சென்றார்.

அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்றபோது நீரில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, உடனிருந்தவர் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், நீண்ட தேடுதலுக்குப் பின்னர் ஷேக் முஹம்மது உடலை சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த மேலப்பாளையம் காவலர்கள் சடலத்தைக் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.