ETV Bharat / city

நாங்குநேரியில் நாராயணன் சிறப்பான வெற்றி! - ஒரு பார்வை... - நாங்குநேரியில் அதிமுக அமோக வெற்றி

நெல்லை: நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 33 ஆயிரத்து 445 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ரூபி மனோகரன் படுதோல்வியைச் சந்தித்தார்.

Nanguneri admk win
author img

By

Published : Oct 24, 2019, 7:53 PM IST

Updated : Oct 24, 2019, 8:44 PM IST

நாங்குநேரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த வசந்தகுமார், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து நாங்குநேரி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, அத்தொகுதிக்கு கடந்த 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. காங்கிரஸ், திமுக கூட்டணி சார்பில் தொழிலதிபர் ரூபி மனோகரன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன் களம்கண்டார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பாணியில், எடப்பாடி பழனிசாமி ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு ஒரு வாய்ப்பு வழங்கினார்.

இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி, நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் என மொத்தம் 23 பேர் இந்தத் தேர்தலில் போட்டியிட்டனர்.

மொத்த வாக்காளர்கள் இரண்டு லட்சத்து 57 ஆயிரத்து 418 பேர். அவர்களில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 624 வாக்குகள் பதிவாகின. இது 66.35 விடுக்காடு ஆகும். இந்நிலையில் 299 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை மையமான நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை சற்று காலதாமதமாக 8.45-க்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. 14 மேசைகள் போடப்பட்டு மொத்தம் 22 சுற்றுகளாக வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது. நேரடியாக தேர்தல் அலுவலர்கள் கண்காணிப்பில் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது.

அரசியல் கட்சி பெற்ற வாக்குகள்
காங்கிரஸ் 61 ஆயிரத்து 932
அதிமுக 95 ஆயிரத்து 377
ஹரி நாடார் (சுயேச்சை) நான்காயிரத்து 242
நாம் தமிழர்
மூன்றாயிரத்து 494
நோட்டா ஆயிரத்து 154

முதல் சுற்றிலிருந்தே அதிமுக கூட்டணி முன்னணி வகித்த நிலையில் 22 சுற்றுகள் எண்ணப்பட்டு அதிமுக 95 ஆயிரத்து 377 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றது. 61 ஆயிரத்து 932 வாக்குகள் பெற்ற திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

அதற்கு அடுத்த இடத்தில் சுயேச்சையாக போட்டியிட்ட ஹரி நாடார் நான்காயிரத்து 242 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி மூன்றாயிரத்து 494 வாக்குகளும் பெற்றிருந்தனர். நோட்டா தன்பங்கிற்கு ஆயிரத்து 152 வாக்குகளைத் தனதாக்கியது. ஆக, 33 ஆயிரத்து 445 வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக நாங்குநேரி தொகுதியில் வெற்றியை ருசித்தது.

இதையடுத்து ரெட்டியார்பட்டி நாராயணன் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.

வெற்றி கொண்டாட்டத்தில் அதிமுக தொண்டர்கள்

அதன்பிறகு தேர்தல் அலுவலர்களை சந்தித்த நாராயணசாமி சான்றிதழைப் பெற்றுக்கொண்டார். நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்ட 23 வேட்பாளர்களில் அதிமுக காங்கிரஸ் வேட்பாளர்களைத் தவிர அனைவரும் வைப்புத்தொகையை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'சீனி சக்கரை சித்தப்பா, பேப்பரில் எழுதி நக்கப்பா!' - காங்கிரசை பங்கம் செய்த ராஜேந்திர பாலாஜி

Intro:நாங்குநேரி இடைத்தேர்தலில் 33,445 வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக வெற்றி. இனிப்பு வழங்கி அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்.Body:நாங்குநேரி இடைத்தேர்தலில் 33,445 வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக வெற்றி. இனிப்பு வழங்கி அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்.

நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் கடந்த 21-ந்தேதி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபிமனோகரன் , அதிமுக வேட்பாளர் நாராயணன் என அரசியல் கட்சி, சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட 23 பேர் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 418 வாக்குகள் இருந்த நிலையில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 624 வாக்குகள் பதிவாகியது. இது 66.35 சதவீதம் ஆகும். இந்நிலையில் 299 வாக்குசாவடிகளில் பதிவான வாக்குபதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை மையமான நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை சற்று கால தாமதமாக 8.45க்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. 14 மேஜைகள் போடப்பட்டு மொத்தம் 22 சுற்றுகள் வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது. நேரடியாக தேர்தல் அதிகாரிகள் கண்காணிபில் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. முதல் சுற்றில் இருந்தே அதிமுக கூட்டணி முன்னணி வகித்த நிலையில் 22 சுற்றுகள் எண்ணப்பட்டு அதிமுக 95,377 வாக்குகளும் காங்கிரஸ்- 61,932
நாம் தமிழர் கட்சி- 3,494, ஹரி நாடார் சுயேட்சை- 4242 மற்றும் நோட்டா- 1,152 வாக்குகள் பதிவாகின. இதில் 33,445 வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக நாங்குநேரி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை மாவட்டம் முழுவதும் உள்ள தொடர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதிமுக நாங்குநேரி தொகுதி வேட்பாளர் வெ. ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் தொண்டர்களுடன் கொண்டாடினார். அதன் பிறகு தேர்தல் அதிகாரிகளை சந்தித்து சான்றிதழை பெற்றுக்கொண்டார்.

நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்ட 23 வேட்பாளர்களில் அதிமுக காங்கிரஸ் வேட்பாளர்களை தவிர அனைவரும் டெபாசிட் தொகையை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.Conclusion:
Last Updated : Oct 24, 2019, 8:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.