ETV Bharat / city

தலைவர் பதவியை குறிவைக்கும் நயினார் நாகேந்திரன்; அணை போடும் அண்ணாமலை

தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக இருந்த எல். முருகன் இணை அமைச்சராகிவிட்ட நிலையில், அந்த பதவிக்கு நயினார் நாகேந்திரன், அண்ணாமலை ஆகியோர் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

author img

By

Published : Jul 8, 2021, 1:37 AM IST

Updated : Jul 8, 2021, 1:49 AM IST

தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராகும் நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி: தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் ஒன்றிய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது.

அமைச்சர் பதவி பரிசு

பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவையில் பாஜக வெற்றி பெற்றிருப்பதால் அதற்கு பரிசாக எல்.முருகனுக்கு இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

இந்நிலையில் எல்.முருகன் அமைச்சராகிவிட்டதால், மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது. எனவே, தமிழ்நாட்டின் அடுத்த பாஜக மாநிலத் தலைவர் யார் என்ற பேச்சு எழுந்துள்ளது.

இந்த சூழ்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக அறிவிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

லிஸ்ட்டில் அண்ணாமலை

அதாவது எல்.முருகனை அமைச்சரவையில் இடம்பெற செய்ய வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிட்ட பாஜக தலைமை, அடுத்தக் கட்டமாக கட்சியின் மாநிலத் தலைவராக யாரை நியமிக்கலாம் என்று ஆலோசித்து வருகின்றனர்.

நயினார் நாகேந்திரன்
நிர்மலா சீத்தாராமனுடன் நயினார்

மாநிலத் தலைவர்கள் தேர்வு பட்டியலில் நயினார் நாகேந்திரன், ஓய்வு பெற்ற முன்னாள் ஐபிஎஸ் அலுவலர் அண்ணாமலை ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. எனவே, அண்ணாமலை அல்லது நயினார் நாகேந்திரன் இருவரில் ஒருவரை தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

அனுபவமிக்க நயினார்

குறிப்பாக, நயினார் நாகேந்திரன் அதிக அரசியல் அனுபவம் உள்ளவராகவும், தென் மாவட்டங்களில் அரசியல் செல்வாக்கு உள்ளவராகவும் அறியப்படுகிறார்.

எனவே அவரை மாநிலத் தலைவராக நியமிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. எல்.முருகன் அமைச்சராக அறிவிக்கப்படுவதை முன்பே அறிந்த நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவர் பதவியை பிடிக்க தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

கைகொடுக்குமா டெல்லி விசிட்

நயினார் நாகேந்திரன்
மாநிலத் தலைவராக தேசிய தலைவரிடம்...

இதை நிரூபிக்கும் வகையில் அவரது டெல்லி விசிட் அமைந்தது. அதாவது, தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற நான்கு பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சில தினங்களுக்கு முன் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்தனர். அந்த வகையில் நயினார் நாகேந்திரன் பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம், நயினார் நாகேந்திரன்

மற்ற எம்எல்ஏக்கள் அனைவரும் பிரதமரை சந்தித்து விட்டு உடனடியாக ஊர் திரும்பி விட, நயினார் நாகேந்திரன் தனது மகனுடன் டெல்லியிலேயே முகாமிட்டு ஒன்றிய அமைச்சர்கள், தலைவர்களை நேரில் சந்தித்தார்.

பிளான் 'அண்ணாமலை'

அதேபோல் மும்பைக்குச் சென்று அங்குள்ள பாஜக தலைவர்கள், எம்எல்ஏக்களைச் சந்தித்து பேசினார். இது அவர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆன பிறகு நடைபெறும் முதல் சந்திப்பு என்றாலும் கூட மாநிலத் தலைவர் பதவியைப் பிடிப்பதற்கான சந்திப்பாக இது அமைந்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

நயினார் நாகேந்திரன்
மும்பையில் நயினார்

அதே சமயம், அண்ணாமலையை மாநிலத் தலைவராக நியமித்து தமிழ்நாட்டில் அதிகளவு இளைஞர்களை பாஜகவில் சேர்க்க திட்டமிட்டிருப்பதாகவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

பதவிக்கு காத்திருக்கிறார்

கூடிய விரைவில், பாஜக மாநிலத் தலைவர் அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து நயினார் நாகேந்திரன் தரப்பினரை தொடர்பு கொண்டு கேட்ட போது, 'இதுவரை மாநிலத் தலைவர் பதவி கேட்டு நயினார் நாகேந்திரன் கட்சி தலைமைக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. அவர்களாக பதவி கொடுத்தால் அதை ஏற்று சிறப்பாக பணிபுரிய காத்திருக்கிறார்' என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 43 புதிய ஒன்றிய அமைச்சர்கள் யார்; அவர்களின் சுயவிவரங்கள் என்ன?

Last Updated : Jul 8, 2021, 1:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.