ETV Bharat / city

‘சேலம் உருக்காலை லாபகரமாக இயங்க மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்’ - சேலம் உருக்காலை தொழிலாளர்கள் போராட்டம்

சேலம்: உருக்காலையை லாபகரமாக இயக்குவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தமிழக பாஜக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சேலம் உருக்காலை தொழிலாளர்கள் போராட்டம்
author img

By

Published : Sep 8, 2019, 5:51 PM IST

சேலம் மாவட்டத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனமான சேலம் இரும்பு உருக்காலையை மத்திய அரசு தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிடக்கோரி உருக்காலை தொழிலாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 35ஆவது நாளாக நடக்கும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்களை பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் இன்று நேரில் சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘சேலம் உருக்காலை குறித்து மத்திய எஃகு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசியுள்ளேன். அப்போது அவர் சேலம் உருக்காலையை லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்’ என்றார்.

வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பு

தொடர்ந்து பேசிய அவர், மூல பொருட்கள் விலையை குறைத்து நட்டத்தை குறைக்கவும், விற்பனை பிரிவை தனியாக பிரிக்கவும், தொழிலாளர்களுக்கு ஏற்படும் வேலை இழப்பை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உருக்காலை நிர்வாகத்தில் ஊழல் நடந்துள்ளதாக தொழிற்சங்கம் கூறும் குற்றச்சாட்டை ஆதாரத்துடன் நிரூபித்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்று கூறினார்.

பின்னர், ஆலை முழுவதும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்றும், அதை ஒருபோதும் தனியார்மையமாக்கி விடக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், கேந்திர வித்தியாலயா பிரச்னை குறித்து எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது என்று கூறினார்.

Intro:சேலம் உருக்காலையை லாபகரமாக இயக்குவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தமிழக பாஜக பொது செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Body:சேலம்

சேலம் உருக்காலையை லாபகரமாக இயக்குவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தமிழக பாஜக பொது செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை நிறுவனமான சேலம் இரும்பு உருக்காலையை மத்திய அரசு தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிடக்கோரி உருக்காலை தொழிலாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் 35 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்களை இன்றைய தினம் பாஜக தமிழக பொதுசெயலாளர் வானதி சீனிவாசன் நேரில் சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானதி சீனிவாசன், சேலம் உருக்காலை குறித்து மத்திய எக்கு துறை அமைச்சர் தரமேந்திர பிரதானை சந்தித்து வலியுறுத்தியதாகவும், அப்போது அவர், சேலம் உருக்காலையை லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் மூல பொருட்கள் விலையை குறைத்து நட்டத்தை குறைக்கவும், விற்பனை பிரிவை தனியாக பிரிக்கவும் நடவடிக்கை எடுப்பதுடன், தொழிலாளர்களுக்கு எக்காரணத்தை கொண்டும் வேலை இழப்பு ஏற்படாது என்று உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.
உருக்காலை நிர்வாகத்தில் ஊழல் நடந்துள்ளதாக தொழிற்சங்கம் கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதாரத்துடன் தந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம் என்றும் அவர் கூறினார்.
மேலும் ஆலை முழுவதும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியதாக தெரிவித்த அவர் தமிழக தொழில்துறை அமைச்சரிடம் உருக்காலை பங்குகளை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசும்பொது, கேந்திர வித்தியாலயா பிரச்சினை குறித்து எதிர்கட்சி தலைவரின் குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது என்று தெரிவித்தார்.

பேட்டி - வானதி சீனிவாசன்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.