சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் அழகாபுரம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்று முடிந்த தேர்தலில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன்.
இதற்கு எதிராக சயேச்சை வேட்பாளர் பிரவீனா என்பவர் எனது வெற்றி செல்லாது என்றும், இடைத்தேர்தல் நடத்த வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் வேட்புமனு விண்ணப்பத்தில் தவறு செய்து உள்ளதாகவும், பிழை உள்ளதாகவும் கூறி வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்கு முறையாக எங்கள் தரப்பு வழக்கறிஞர்கள் பதில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை தொடர்ந்தவர் வழக்கு விசாரணையின்போது மூன்று முறை நேரில் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இந்தநிலையில் ஆஜரானால் நீதிமன்ற நேரத்தை வீண் ஆக்கியதாக அபராதம் விதிப்பார்கள் என்பதால் வழக்கை திரும்ப பெற்றுக் கொண்டனர்.
இந்த வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சிலரின் தூண்டுதலின் பேரில் என் மீது சுயேச்சை வேட்பாளர் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கில் உண்மை வென்றுள்ளது” என்றார்.
இதையும் படிங்க: 'ரஜினியின் வழி தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை' - கமல் பாராட்டு