ETV Bharat / city

'வீட்டிலிருந்தே விளையாடுங்கள்' - ஆன்லைன் கேம்களுக்கு 'குட் பை'

author img

By

Published : May 19, 2021, 3:12 PM IST

வீடியோ கேம், ஆன்லைன் கேம் என்று ஸ்மார்ட் போனை கையிலிருந்து இறக்கி விடாத குழந்தைகளுக்கு மத்தியில் அதற்கெல்லாம் குட் பை சொல்லி 'குட் ஸ்டூடன்ட்ஸ்' என்று பெயரெடுத்துள்ளனர், சேலம் அரிசிப்பாளையத்தை சேர்ந்த ஷிபி, யோகித் இருவரும்.

'வீட்டிலிருந்தே விளையாடுங்கள்'  - ஆன்லைன் கேம்களுக்கு 'குட் பை'
'வீட்டிலிருந்தே விளையாடுங்கள்' - ஆன்லைன் கேம்களுக்கு 'குட் பை'

ஊரடங்கு காலத்தில் வீடு அடங்கி கிடக்கும் பள்ளிச் சிறார்களுக்கு ஒரு நாளைக் கடத்துவது என்பது சவாலான விஷயமாகவே உள்ளது. ஆன்லைன் மூலம் பள்ளிகள் கல்வி வழங்கி வந்தாலும், மாணவ மாணவியர் ஆன்லைன் கேம் விளையாடுவதையே ஆர்வமாக செய்து வருகின்றனர் என்பது பெரும்பாலான பெற்றோரின் புலம்பலாக உள்ளது.

ஆன்லைன் கேம், விளையாடும் குழந்தைகள் முழுக்க முழுக்க கற்பனை உலகில் சஞ்சரிக்க வைத்து, யதார்த்த நடைமுறை உலகையே மறக்கடித்து, சிந்தனைக்கும் செயலுக்குமான தொடர்பைத் துண்டித்து விடும் ஆபத்தை விளைவிக்கும் என்று கல்வியாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இந்தச் சிக்கலில் இருந்து பள்ளிக் குழந்தைகள் மீள, ஊரடங்கு காலம் பயனுள்ளதாக அமைய, குடும்ப அமைப்பு, கூடி விளையாடும் எளிமையான விளையாட்டுகளை தலைமுறைகள் கடந்தும் நமக்குக் கற்றுக்கொடுத்து வருகிறது.

குடும்பத்துடன் பல்லாங்குழி
குடும்பத்துடன் பல்லாங்குழி
அந்த வகையில் சேலம் அரிசிப்பாளையத்தை சேர்ந்த பள்ளிக்குழந்தைகள் ஷிபி, யோகித் இருவரும், ''ஆன்லைன் கேம்ஸ் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதால், எங்கள் தாத்தா பாட்டி சொல்லிக்கொடுக்கும் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளை ஆர்வமுடன் விளையாடி வருகிறோம்" என்று உற்சாகம் பொங்கத் தெரிவிக்கின்றனர்.
தமிழர்களின் இல்லங்கள் தோறும் திண்ணைகள் இருந்த காலங்களில் மிகவும் பிரபலமாக விளங்கிய தாயம், பரமபதம், ஆடுபுலி ஆட்டம், அஞ்சாங்கல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் அதிக பொருட்செலவு ஏற்படுத்தாதவை. அவற்றை விளையாடுவதற்கு இரண்டு பேர் அல்லது நான்கு பேர் அமரக்கூடிய திண்ணை போன்ற இடம் இருந்தாலே போதுமானது என்பதால், இந்த விளையாட்டுகள் ஒரு காலத்தில் அனைவரின் வீடுகளிலும் ஓய்வு நேரங்களில் விளையாடப்பட்டு வந்தது.
ஆன்லைன் கேம்களை புறக்கணித்து பாரம்பரிய விளையாட்டுகள் பக்கம் கவனம் செலுத்தும் சிறார்கள்
தற்போது தொலைக்காட்சி, ஸ்மார்ட்போன்கள் மக்களின் ஓய்வு நேரத்தை கொள்ளையடித்து கொண்டதால் இந்த விளையாட்டுகள் பெரும்பாலும் விளையாட படுவது இல்லை என்பதே யதார்த்தமாக உள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு இந்த விளையாட்டுகளை மீண்டும் குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் துணையோடு இளைய தலைமுறையினரும் கற்றுக்கொண்டு ஆர்வமுடன் உற்சாகமாக விளையாடி வருகின்றனர். இந்த விளையாட்டுகளை தனது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து அவர்களுடன் தானும் சேர்ந்து விளையாடி உற்சாகத்தை பெறுவதாக் கூறுகிறார் குடும்பத் தலைவி ஹேமலதா. அவர் மேலும் கூறுகையில்," நமது பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடுவதன் மூலம் உடலுக்கும் மனதிற்கும் உற்சாகம் கிடைக்கிறது.

ஒவ்வொரு விளையாட்டிலும் ஒவ்வொரு உளவியல் கருத்து ஒளிந்துள்ளது. கை விரல்களுக்கு அக்குபஞ்சர் சிகிச்சையைப் போல 'அஞ்சாங்கல் விளையாட்டு' அமைந்துள்ளது. விரல்களின் நரம்புகள் வலுப்பெறும் வகையிலான அந்த விளையாட்டு குழந்தைகளுக்கு உடல் நலனைத் தரக்கூடியது.

கல்லாட்டம்
கல்லாட்டம்
அதுபோல பெண் குழந்தைகள் திருமணம் ஆனதற்குப் பிறகு குடும்ப உறவுகளை உறவினர்களை ஒருங்கிணைத்து அரவணைப்புடன் வாழ 'அஞ்சாங்கல் விளையாட்டு' கற்றுக் கொடுக்கிறது. இது போன்ற விளையாட்டுகள் இந்த ஊரடங்கு காலத்தில் குழந்தைகளுக்கு ஒரு வரப்பிரசாதம். அதை அனைத்து பெற்றோரும் கற்றுக்கொடுத்து, குழந்தைகளின் உடல் நலனைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.
சேலத்தின் செவ்வாய்ப்பேட்டை முதல் அக்ரஹாரம் உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் தற்போது தாயக் கட்டைகள், பரமபத போர்டுகள், செஸ் போர்டு, கேரம் போர்டு ஆகிய விளையாட்டு பொருட்கள் அதிக அளவில் விற்பனை ஆவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
சென்ற ஆண்டு போலவே இந்த ஆண்டும் கோடை விடுமுறை காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், இந்த விளையாட்டுப் பொருட்களின் விற்பனை இன்னும் அதிகரிக்கும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:

நம்மையும் காத்து, நாட்டு மக்களையும் காப்போம் - விழிப்புணர்வு காணொலி வெளியிட்ட முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.