இது குறித்து, சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல், வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு கீழ்க்குறிப்பிட்டுள்ள நாள்களில் மதுபானக்கடைகள், மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 27, 30 ஆகிய இரு நாள்களில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு வருகின்ற 25ஆம் தேதி (புதன்கிழமை) மாலை 5 மணி முதல் 27ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி வரையில் டாஸ்மாக், மதுபான கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும்.
அதேபோல் 28ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 5.00 மணி முதல் 30ஆம் தேதி (திங்கள்கிழமை) மாலை 5 மணி வரையிலும், வாக்கு எண்ணிக்கை 2020 ஜனவரி 02ஆம் தேதியன்று நடைபெறுவதை முன்னிட்டு அன்றைய தினம் முழுவதும் சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகள், மதுக்கூடங்கள் மூடப்பட வேண்டும்.
மேலே குறிப்பிட்ட நாள்களில் சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து எஃப்.எல்.2 முதல் எஃப்.எல்.11 வரையிலான (எஃப்.எல்.6 தவிர) உரிமம் பெற்ற டாஸ்மாக் மதுபான கடைகள், மதுபான பார்கள், உணவக மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.
மேலும், மேற்கண்ட நாள்களில் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது என அறிவிக்கப்படுகிறது. இதனை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.