ETV Bharat / city

காந்தியின் 150ஆவது பிறந்தநாள்: மரக்கன்றுகள் வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினர்! - omalur MLA

சேலம்: மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் மரக்கன்றுகளை நட்டு, பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினார்.

மரக்கன்றுகள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்
author img

By

Published : Oct 3, 2019, 5:10 AM IST

சேலம் மாவட்டம், ஓமலூர் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட பிருந்தாவனம் நகர குடியிருப்புப் பகுதிகளில் ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல், காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு காந்தியின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் அப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டார்.

இதைத் தொடர்ந்து அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மா, பலா, நெல்லிக்காய், நாவல் உள்ளிட்ட மரக்கன்றுகளை இலவசமாக வழங்கினார்.

மரக்கன்றுகள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்

உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தால் தட்பவெப்ப சூழ்நிலை மாறிவருகிறது, ஆகையால் அனைவரும் வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பதை மாற்றி, வீட்டுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட மரங்களை வளர்ப்போம் என உறுதி எடுப்போம் என பொதுமக்களுக்கு அறிவுரையையும் அவர் வழங்கினார்.

இதையும் படிங்க: ஈடிவி பாரத்தின் பாடலை பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி!

Intro:மகாத்மா காந்தியின் 151வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஓமலூர் பேரூராட்சி பகுதிகளில், ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் மரக்கன்றுகளை நட்டு, பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினார்.
Body:

சேலம் மாவட்டம், ஓமலூர் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பிருந்தாவனம் நகர குடியிருப்பு பகுதிகளில் ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நட்டார்.

முன்னதாக காந்தியின் உருவ படத்திற்கு , அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மா, பலா, நெல்லிக்காய் மற்றும் நாவல் உள்ளிட்ட மரக்கன்றுகளை இலவசமாக வழங்கினார்.

உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தால் தட்பவெப்ப சூழ்நிலை மாறிவருகிறது, ஆகையால் நாம் அனைவரும் வீட்டுக்கு வீடு ஒரு மரம் வளர்ப்போம் என்பதை மாற்றி வீட்டுக்கு வீடு இரண்டுக்கும் மேற்பட்ட மரங்களை வளர்ப்போம் என உறுதி எடுப்போம் எனவும் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Conclusion:
தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் வழங்கிய மரக்கன்றுகளை ஆர்வத்துடன் பொதுமக்கள் வாங்கி சென்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.