கரோனா வைரஸ் (தீநுண்மி) தாக்கம் தொடர்கதையாக நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. அனைத்து மக்களும் இதனால் பாதிக்கப்பட்டும், இறந்தும்வருகின்றனர். இதனால் மக்கள் மிகுந்த பீதியுடன் காணப்படுகின்றனர்.
இரவு நேர ஊரடங்கு
தமிழ்நாட்டில் இன்றுமுதல் (ஏப். 20) இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதால் சேலத்திலிருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளின் நேரங்களில் மாற்றம்செய்யப்பட்டுள்ளன. கரோனா இரண்டாம் அலை தடுப்பு நடவடிக்கை காரணமாக இன்று இரவுமுதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
இந்த ஊரடங்கு இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதனால், பொது, தனியார் போக்குவரத்து தடைசெய்யப்படுகிறது. இதன், முதல் படியாக சேலத்திலிருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளின் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தியில்,
ஊர்கள் | கடைசி பேருந்தின் நேரம் |
சேலம் | மதியம் 02:00 மணி |
வேலூர் | மாலை 04:30 மணி |
திருவண்ணாமலை | மாலை 05:00 மணி |
விழுப்புரம் | மாலை 06:00 மணி |
திருப்பத்தூர் | மாலை 06:30 மணி |
மைசூர் | மாலை 05:00 மணி |
சிதம்பரம் | மாலை 05:00 மணி |
ஓசூர் | மாலை 06:30 மணி |
திருப்பூர் | மாலை 07:00 மணி |
பெங்களூரு | மாலை 07:00 மணி |
மதுரை | மாலை 05:30 மணி |
கோவை | மாலை 06:00 மணி |
மேலும், நகர மற்றும் இதர பேருந்துகளின் நேரங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சேலம் மாநகர போக்குவரத்துக் கழகம் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'கடந்த 24 மணி நேரத்தில் 2.59 லட்சம் பேருக்கு கரோனா'