சேலம்: ஏற்காடு பிரதான சாலையில் இயங்கி வரும் சென்ட்ரல் சட்டக் கல்லூரியின் 24ஆவது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்வில் அவர் கூறியதாவது, ”பொது மக்களுக்கான சட்ட அறிவிப்புகளை கொண்டு சேர்க்கும் வகையில் மாணவர்கள் பொதுமக்களுக்கு பாலமாக இருக்க வேண்டும்.
சட்டக்கல்லூரி மாணவர்களின் கல்வியை கருத்திற்கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மாவட்டத்துக்கு ஒரு சட்டக் கல்லூரி என்ற அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளார்.
மேல்நிலை கல்வியிலேயே சட்ட வடிவங்களை பாடப்புத்தகங்களில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை உள்ளது. அக்கோரிக்கையும் தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது, விரைவில் இதற்கான அறிவிப்பு வரும்” என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன், சேலம் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: Cultural Revolution Madurai: நன்னெறியில் வாழ்வோருக்கு அந்தணர் பட்டம் - மதுரையின் பண்பாட்டுப் புரட்சி