பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா டி. அய்யம்பட்டி, குருபரஹள்ளி, மணியம்பாடி, சிந்தல்பாடி பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மரவள்ளியை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததால், மரவள்ளிச் செடிகள் வளர்ச்சியின்றி காணப்பட்டது.
தற்போது அறுவடை தொடங்கியுள்ள நிலையில், மரவள்ளிக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நடவுக்கூலி, ஆட்கள் கூலி, உரம் என ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள விவசாயிகளுக்கு அதற்கான விலை கிடைக்கவில்லை.
மரவள்ளிக் கிழங்கு குவிண்டாலுக்கு 19,500 ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் விலை சரிவு காரணமாகவும், விவசாயிகளுக்கு லாபம் குறைந்துள்ளதால் அவர்கள் கடும் மன வருத்தத்தில் உள்ளனா்.
இதையும் படிங்க: மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த விவசாயி