ETV Bharat / city

கரோனா அதிவிரைவு பரிசோதனைக் கருவி அறிமுகம்; தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்குச் சோதனை! - ராபிட் டெஸ்ட் கருவிகள்

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனோ நோய்க் கிருமித் தொற்றை கண்டறியும் ராபிட் கிட் இன்று அறிமுகம் செய்யப்பட்டு அதன் மூலம் முதல் முறையாக, தனிமைப் படுத்தப்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

corona rapid test kit salem
corona rapid test kit salem
author img

By

Published : Apr 18, 2020, 4:43 PM IST

நாடு முழுவதும் கரோனோ நோய்க் கிருமித் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்தச் சூழலில் சேலம் தலைமை அரசு பொது மருத்துவமனையில் கரோனாவைக் கண்டறியும் அதிவிரைவுப் பரிசோதனைக் கருவி (Corona Rapid Test Kit) இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

corona rapid test kit salem
கரோனா அதிவிரைவு பரிசோதனைக் கருவி

இதன் மூலம் கரோனோ ஒரு நபருக்கு இருந்தால், அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டு 15 நிமிடங்களில் முடிவு தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களுக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "இதன் மூலம் பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் கிடைக்கும் என்பதால் மத்திய அரசிடம், தமிழ்நாடு அரசு அந்தக் கருவிகளை அனுப்ப கோரிக்கை வைத்திருந்தது. அதன்படி தற்போது மத்திய அரசு சார்பில் மாநிலத்துக்கு 24 ஆயிரம் கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

corona rapid test kit salem
கருவி குறித்து விளக்கமளிக்கும் மருத்துவர்கள்

அதில் ஆயிரம் கருவிகள் சேலத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று இந்த பரிசோதனை கருவிகள் மூலம் சேலம், சென்னை, கோயம்புத்தூர், மதுரை அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்யப்படும். இந்த அதிவிரைவுப் பரிசோதனைக் கருவி மூலம் நோயாளிகளின் பரிசோதனை செய்யும் முறை இன்று சேலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆட்சியர் ராமன் இந்த நவீன முறைக் கருவியை அறிமுகப்படுத்தி வைத்தார. சேலம் மாவட்டத்தில் இதுவரை 24 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 7 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கரோனா அதிவிரைவு பரிசோதனைக் கருவி அறிமுகம்; தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்குச் சோதனை!

சேலம் மாவட்டத்தில் நோயின் தாக்கம் உள்ளதாக சந்தேகப்படும் நபர்கள், அவர்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு எளிமையாக இந்த சோதனை செய்யப்படும். இதன் மூலம் நோய்த் தொற்று உள்ளவர்கள் எளிதில் குணப்படுத்திவிட முடியும்" என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.