சேலத்தில் இன்று அதிருப்தி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பெங்களூரு புகழேந்தி தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த புகழேந்தி கூறுகையில், ‘அரசியலில் தினகரன் காணாமல் போய்விடுவார். அவரின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமானது தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய முடியாது.
எனவே அங்கிருந்து அதிமுகவில் இணைவதுதான் சரி. இவ்வளவு நாட்கள் தினகரன் பின்னால் சென்று சோதனைகளும் வேதனைகளும் தான் மிச்சமாகி உள்ளது. அங்கு உள்ள முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தினகரனை முழுமையாக முடித்து விட்டுத்தான் வெளியே வருவார். அவர் தான் அந்த கட்சியில் ஸ்லீப்பர் செல். அதை நான் இப்போதுதான் உணர்ந்து இருக்கிறேன்.
டிடிவிக்கு எதிராக அணி திரளும் பெங்களூரு புகழேந்தி கோஷ்டி!
சேலத்தில் மட்டுமல்ல தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், குறிப்பாக மதுரை மாவட்டம் உட்பட அனைத்து பகுதியில் இருந்தும் அமமுகவினர் அதிமுகவில் இணைவதற்குத் தயாராகி வருகின்றனர். ஜெயலலிதா எம்ஜிஆரின் கனவை அன்போடும் பண்போடும் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தலைவராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.
அமமுக அதிருப்தி நிர்வாகிகள் கூட்டம்: ஏழு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!
அவர்தான் நல்ல முதலமைச்சராக நாட்டையும், கட்சியையும் வழிநடத்திச் செல்கிறார். எனவே அவர் பின்னால் இணைவதுதான் சரி" என்று கூறினார்.