ETV Bharat / city

அதிமுகவினர் வழங்கிய டோக்கனை கிழித்தெறிந்த வாக்காளர்கள்! - சோழவந்தான் தொகுதி

மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுகவினர் வழங்கிய டோக்கனை பொதுமக்கள் கிழித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

token
token
author img

By

Published : Apr 6, 2021, 10:04 PM IST

மதுரை மாவட்டம் சோழவந்தான் தனித்தொகுதியில் திமுக சார்பில் வெங்கடேசன், அதிமுக சார்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரான மாணிக்கம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதோடு, அமமுக கூட்டணியில் தேமுதிக, மநீம, நாதக ஆகியவையும் தங்களது வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன. இந்நிலையில் நேற்றிரவு முதல், வீடு வீடாக சென்று வாக்காளர்களை கவர்வதற்காக அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதற்கான டோக்கனை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து, வாக்குப்பதிவு நாளான இன்றும் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் டோக்கன் வழங்கியிருக்கின்றனர். அதனை வாங்கிய பொதுமக்கள் வாக்குச்சாவடி முன்பாகவே அதிமுக முகவர் முன்னிலையில் பணத்திற்கான டோக்கனை கிழித்து எறிந்து விட்டுச் சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுகவினர் வழங்கிய டோக்கனை கிழித்தெறிந்த வாக்காளர்கள்!

இதனையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் பறக்கும் படையினர், அதிமுகவினரின் வாகனங்களை பறிமுதல் செய்து வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க: வாக்காளர் மீது பாமக நிர்வாகி தாக்குதல்: வீரபாண்டியில் பரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.