மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகே ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ரூ.42 கோடி செலவில் மல்டி லெவல் பார்க்கிங் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. இதில் 110 நான்கு சக்கர, 1400 இருசக்கர வாகனங்கள் நிறுத்த முடியும் என கூறப்படுகிறது.
இதனால் மதுரை மாநகரில் கணிசமாக போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும் எனவும், மேலும் தற்போது வரை 98 சதவீதம் பணிகள் முடிவடைந்து பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள பார்க்கிங்கில் ஏராளமான வெளியூர் மற்றும் உள்ளூர் வாகனங்களை பலரும் அனுமதியை மீறி பணிகளுக்கு இடையூறு செய்யும் விதமாக நிறுத்துகின்றனர்.
இதனால் கட்டிட பணிகளுக்கு தேவையான கட்டுமான பொருள்களை கொண்டு வருவதற்க்கும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், பணியாட்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மாநகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுகின்றனர்.
இதையும் படிங்க: மதுரையில் வீட்டில் இருந்த முதியவர் வெட்டிக்கொலை - மர்ம கும்பலுக்கு வலைவீச்சு