ETV Bharat / city

விடிய விடிய தசாவதாரக் கோலங்களில் காட்சியளித்த கள்ளழகர் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் - கள்ளழகர்

மதுரை ராமராயர் மண்டகப்படியில் விடிய விடிய நடைபெற்ற இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

விடிய விடிய தசாவதாரக் கோலங்களில் காட்சியளித்த ஸ்ரீகள்ளழகர்

author img

By

Published : Apr 18, 2022, 7:30 PM IST

Updated : Apr 18, 2022, 7:52 PM IST

ஏப்ரல் 16-ஆம் நாள் அதிகாலை 6 மணியளவில் மதுரை வைகையாற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீகள்ளழகர், அங்கிருந்து புறப்பட்டு பிற்பகல் மதிச்சியம் ராமராயர் மண்டகப்படியில் நடைபெற்ற தீர்த்தவாரியில் கலந்து கொண்டார். பிறகு அன்றிரவு, வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் தங்கிய அழகர் நேற்று(ஏப்ரல்.17) காலை வைகையாற்றுக்குள் அமைந்துள்ள தேனூர் மண்டகப்படியில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தார்.

பிறகு அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணியளவில் மதிச்சியம் ராமராயர் மண்டகப்படிக்கு வந்து கள்ளழகர், அங்கு இரவு முழுவதும் தசாவதாரக் கோலங்களில் விடிய விடிய பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனையடுத்து முத்தங்கி சேவை, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், வராக அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மோகினி அவதாரங்களில் காட்சியளித்தார்.

இந்நிகழ்வினைக் காண ராமராயர் மண்டகப்படி முன்பாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். இன்று(ஏப்ரல்.18) அதிகாலை நடைபெற்ற மோகினி அவதாரத்திற்குப் பிறகு பக்தி உலா நடைபெற்றது.

இன்று நள்ளிரவு நடைபெறும் பூப்பல்லக்கு நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிறகு நாளை(ஏப்ரல்.19) காலையில் அழகர் திருமாலிருஞ்சோலைக்குப் புறப்படுகிறார்.

இதையும் படிங்க: சென்னை சாதனா 'மிஸ்' திருநங்கையாக தேர்வு

Last Updated : Apr 18, 2022, 7:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.