ETV Bharat / city

அந்நியன் போன்று பல்வேறு சுவாரஸ்யங்கள் நிறைந்தது ’கோப்ரா’ திரைப்படம்... நடிகர் விக்ரம்

author img

By

Published : Aug 24, 2022, 10:10 AM IST

கோப்ரா திரைப்படம் அந்நியன் திரைப்படத்தை போன்று சண்டை, காதல் உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யங்கள் நிறைந்தது என நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.

அந்நியன் போன்று பல்வேறு சுவாரஸ்யங்கள் நிறைந்தது ’கோப்ரா’ திரைப்படம்

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் 'கோப்ரா'. இத்திரைப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் விக்ரம், நடிகைகள் மீனாட்சி, மிருணாளினி ரவி, ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.

நடிகர் விக்ரம் வருகைக்காக ஏராளமான மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் காத்திருந்தனர். இதனையடுத்து நடிகர் விக்ரம் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவ மாணவிகள் மத்தியில் கடும் நெரிசலில் சிக்கியபடி வருகை தந்தார்.

அப்போது பேசிய விக்ரம், "மதுரைக்கு வந்தவுடன் வீரத்தை வெளிப்படுத்தும் வகையில் மீசை தானாகவே மேலே சென்றுவிட்டது. நடிகர் துருவ் விக்ரம் அனைவருக்கும் ஐ லவ்யூ சொல்ல சொன்னார். மதுரை என்றாலே ரொம்ப பிடிக்கும், எனது அப்பா படித்தது அமெரிக்கன் கல்லூரி தான் என்றார்.

மதுரை அமெரிக்கன் கல்லூரி குறித்து இயக்குனர் அமீர் அடிக்கடி என்னிடம் பேசுவார், ஹவுஸ்புல் பட சூட்டிங்கின் போது மதுரைக்கு வந்த நான் மதுரை பற்றிய பல்வேறு விஷயங்களை தெரிந்துகொண்டேன். மேலும் சுவையான உணவுகளை சாப்பிட்டேன். நான் டயட்டில் இருந்தாலும் கூட மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா சாப்பிட்டேன். அவ்வளவு ருசியாக இருந்தது.

அந்நியன் திரைப்படம் போன்று சண்டை, காதல், கிரைம் உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யங்கள் உள்ள படம் கோப்ரா எனவும், மதுரைக்காரர்களுக்கு சினிமா என்றாலே வெறி என்பதை நிரூபிக்கும் வகையில் அவ்வளவு வரவேற்பு தருகிறார்கள் என்றார்.

உங்களுக்கு பிடித்த படம் பற்றி என மாணவர்களின் கேள்விக்கு, எனக்கு பிடித்த படம் கோப்ரா தான் என்றார். சினிமாவிற்கு வருவது கடினமா எளிமையா என்ற ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த அவர், சினிமாவிற்கு வருவது கடினமானது இருந்தாலும் விடாமுயற்சி செய்தால் நிச்சயம் வரலாம் என்றார்.

தொடர்ந்து ரசிகர்களுடன் செல்ஃபி மற்றும் வீடியோ எடுத்துக்கொண்டார் விக்ரம். இதனையடுத்து பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டுச் சென்றார்.

இதையும் படிங்க: கோப்ராவில் நிறைய புதுமைகள் இருக்கின்றன... நடிகர் விக்ரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.