ETV Bharat / city

ஜல்லிக்கட்டு காளைகளுக்கான கணக்கெடுக்கும் பணி - இணையத்தில் பதிவேற்றம் - jallikattu bulls medical checkUP

மதுரை: திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவமனையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் காளைகளின் உரிமையாளர்கள் தங்களுடைய காளைகளுடன் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர்.

திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவமனையில் காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை
திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவமனையில் காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை
author img

By

Published : Dec 21, 2019, 1:39 PM IST

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு கால்நடை துறை சார்பில் ஜல்லிக்கட்டு காளைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த பணி ஜனவரி 13ஆம் தேதி வரை நடைபெறும்.

திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவமனையில் காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை

அந்தந்த பகுதிக்கு உட்பட்ட கால்நடை மருத்துவமனைகளில் நடைபெறும் இந்த கணக்கெடுக்கும் பணியில் ஜல்லிக்கட்டு காளைகளின் இனம், உயரம், கொம்பின் இடைவெளி, வயது ஆகியவை குறித்த தகவல்களும் காளைகளின் புகைப்படமும் காளைகளின் உரிமையாளர்கள் குறித்த விவரமும் இணையம் மூலமாக பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவமனையில் நடைபெற்று வரும் கணக்கெடுக்கும் பணியில் காளைகளின் உரிமையாளர்கள் தங்களுடைய காளைகளுடன் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர்.

இது குறித்து பேசிய கால்நடை மருத்துவர் சிவக்குமார், இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள காளைகளின் எண்ணிக்கை அந்த காளைகளின் இனம் காளைகளின் நோய்தன்மை ஆகியன பற்றி தெரிந்துகொள்ளலாம். காளைகள் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ள குறைந்தபட்ச வயது மூன்றாகவும், உயரம் 120 சென்டிமீட்டராகவும் தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது." என்று கூறினார்.

இதையும் படிங்க:

படித்தது இளங்கலை! பிடித்தது இளங்காளை!

Intro:*மதுரை திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவமனையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான கணக்கெடுக்கும் பணி ஆன்லைன் பதிவு துவக்கம் - காளைகளின் உரிமையாளர்கள் காளைகளுடன் ஆர்வமுடன் பங்கேற்பு.*Body:
*மதுரை திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவமனையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான கணக்கெடுக்கும் பணி ஆன்லைன் பதிவு துவக்கம் - காளைகளின் உரிமையாளர்கள் காளைகளுடன் ஆர்வமுடன் பங்கேற்பு.*

தமிழர்களின் பராம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளது.

அதற்காக காளை உரிமையாளர்கள் ஜல்லிகட்டு போட்டிக்காக காளைகளை தயார் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிகட்டு போட்டிக்காக
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவமனையில் ஜல்லிக்கட்டு காளைகள் கண்க கெடுக்கும் பணிக்காக புதிய தகவல் மையம் உருவாக்கப்படுகிறது

தமிழ்நாடு அரசு கால்நடை துறை சார்பில் கால்நடை மருத்துவமனைகளில் ஜல்லிக்கட்டு காளைகள் குறித்த தகவல் மையம் உருவாக்கப்பட்டுள்ளது .

இதன்படி ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளப் படும் காளைகளின் உயரம், கொம்பின் இடைவெளி, வலது கண்ணின் கருவிழி ஆரியவை புகைப்படம் எடுக்கப்படுகிறது. இதனை ஆன்லைன் மூலம் பதிவு செய்து தமிழகம் முழுவதும் ஒருங்கிணைக்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டு காளைகள் பதிவு செய்யப்படும்போது அதனை மாட்டின் உரிமையாளர்களின் பெயர் முகவரி, ஆதார் கார்டு மற்றும் தகவல் தொடர்பு கொள்ள அலைபேசி எண் ஆசியவை இணைத்து பதிவு செய்யப்படுகிறது.

இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள மொத்த காளைகள் எவ்வளவு என்று என்பதும் எந்தெந்த இனங்கள் உள்ளன என்பதையும் தெரிந்துகொள்ள உதவும் .

இதன் மூலம் ஜல்லிக்கட்டு காளைகளின் மொத்த கணக்கெடுப்பு விவரம் மற்றும் நோய்த் தன்மை குறித்து ஆய்வு செய்யவும் இது மிகவும் உதவியாக இருக்கும் என்று கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர் .

கடந்த திங்கட்கிழமை முதல் கால்நடை மருத்துவமனைகளில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கால்நடைகள் குறித்த கணக்கெடுப்பு தகவல் சேவை மையத்தில் இதுவரை 40 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒருவர் எத்தனை மாடுகள் வைத்து இருந்தாலும் பதிவு செய்துகொள்ளலாம், பதிவு செய்ய வரும்பொழுது மாட்டின் புகைப்படம் மற்றும் ஆதார் கார்டு ஆகியவை கொண்டு வந்தவுடன் ஜல்லிக்கட்டு மாட்டின் வலது கருவிழி, கொம்பின் உயரம், இடைவெளி, மாட்டின் உயரம் மாட்டின் நிறம் ஆகியவை பதிவு செய்யப்படுகிறது,

ஜல்லிக்கட்டு மாடுகள் போட்டிகளில் கலந்துகொள்ள குறைந்தபட்ச வயது 3ல் இருந்தும், உயரம் 120 சென்டி மீட்டர் இருந்தால் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கு பெற தகுதி உடையதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கால்நடைத்துறை மருத்துவமனைகளில் ஜல்லிக்கட்டு காளைகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது எதிர்வரும் ஜனவரி மாதம் 13ஆம் தேதி வரை பதிவு செய்யப்படும் என கூறப்படுகிறது ,

பேட்டி
டாக்டர் சிவகுமார், கால்நடை மருத்துவமனை திருப்பரங்குன்றம்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.