ETV Bharat / city

புனலூர் - கொல்லம் புதிய மின்மய அகல ரயில் பாதை... பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

மதுரை கோட்ட பகுதியில் அமைந்துள்ள புனலூர் - கொல்லம் புதிய மின்மய அகல ரயில் பாதையை இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 1, 2022, 3:22 PM IST

மதுரை: இந்தியாவில் உள்ள அனைத்து ரயில் பாதைகளும் மின்மயமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மதுரை கோட்டத்தில் பல்வேறு அகல ரயில் பாதைப்பிரிவுகள் மின்மயமாக்கம் செய்யப்பட்டுவிட்டன.

சமீபத்தில் மதுரை கோட்ட எல்கைக்குள் உள்ள கேரள மாநிலப்பகுதியான புனலூர் - கொல்லம் அகல ரயில் பாதை ரூபாய் 76 கோடி செலவில் மின்மயமாக்கம் செய்யப்பட்டது.

இந்த புதிய மின்மயப்பாதையை கேரள மாநிலம், கொச்சியில் இன்று (செப்.01) மாலை 6 மணியளவில் நடைபெறும் அரசு விழாவில் மக்கள் செயற்பாட்டிற்கு திறந்து வைக்கிறார், பிரதமர் நரேந்திர மோடி. இந்தப் புதிய ரயில் பாதையை தொடங்கி வைக்கும் விதமாக ஒரு சிறப்பு ரயிலையும் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.

இதைத்தொடர்ந்து செப். 2ஆம் தேதி முதல் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படும் இரண்டு கொல்லம் - புனலூர் ரயில்கள், சென்னை புறநகர் ரயில்கள் இயக்கப்படுவது போல மின்சார ரயில் தொடர் மூலமும் இயக்கப்பட இருக்கிறது.

இதையும் படிங்க: பிரதமர் மோடி கேரளா பயணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.