ETV Bharat / city

ஆக்சிஜன் முகக்கவசம் - மதுரை காமராஜர் பல்கலை. பேராசிரியரின் அசத்தல் கண்டுபிடிப்பு - நானோ தொழில்நுட்பத்தில் ஆக்சிஜன் முகக்கவசம்

மதுரை: கரோனா நோயாளிகளுக்கு அதிகளவில் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் சிலிண்டருக்கான பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் நானோ தொழில்நுட்பத்தில் ஆக்சிஜன் முகக்கவசத்தைக் கண்டுபிடித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆரோக்கியதாஸ் அசத்தியுள்ளார்.

நானோ டெக்னாலஜி
நானோ டெக்னாலஜி
author img

By

Published : Apr 30, 2021, 3:30 PM IST

இந்தியா முழுவதும் கரோனா இரண்டாவது அலை மிகத் தீவிரமாகப் பரவிவரும் நிலையில் வட மாநிலங்களில் தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை மிகக் கடுமையாக இருந்துவருகிறது. இதன் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகின்றன.

கரோனா நோய்த்தொற்றின் காரணமாக உலகம் முழுவதும் தற்போது முகக்கவசம் அணிய வேண்டிய சூழ்நிலை நிலவிவருகிறது. மேலும் முகக்கவசங்கள் அணிவதன் மூலம் நாம் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடு காற்றையே திரும்ப சுவாசிக்க வேண்டிய சூழ்நிலை இருந்துவருகிறது.

பெரும்பாலான நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதன் காரணமாகவே உயிரிழப்புகள் அங்கே கடுமையாக நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

இதனால் இந்தியா முழுவதும் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாடு, உலக அளவில் பல்வேறு வகையான நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் குறைக்கும் வகையில் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆரோக்கியதாஸ் தற்போது அதி முக்கியத்துவம் வாய்ந்த முகக்கவசத்தை நானோ டெக்னாலஜி மூலம் கண்டுபிடித்துள்ளார்.

இது குறித்து பேராசிரியர் ஆரோக்கியதாஸ் கூறுகையில், "நானோ தொழில்நுட்பம் கொண்ட முகக்கவசம் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறேன். நானோ தொழில்நுட்பம் மூலம் நாம் சுவாசிக்கும் கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றி ஆக்சிஜன் கிடைக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்பு மூலம் நாம் இருக்கும் இடத்திலிருந்தே ஆக்சிஜன் உருவாக்கி நமக்கு தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மனிதனின் சூழ்நிலைக்கு ஏற்ப ஆக்சிஜன் அளவு எவ்வளவு கிடைக்கும் என்பதைக் கணக்கிட்டு தரும் வகையில் தொழில்நுட்பத்தை இந்தக் கண்டுபிடிப்பில் சேர்த்துள்ளோம்.

இந்தக் கண்டுபிடிப்பு ஆஸ்துமா நோயாளிகள், சிறுவர்கள், பெரியவர்கள், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளிகளுக்கு என தனி கவனத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் வெற்றியடைந்து விற்பனைக்கு வரும்பொழுது சென்சார் தொழில்நுட்பத்துடன் கூடிய முகக்கவசத்தின் விலை ரூ.500 ஆகவும் சென்சார் தொழில்நுட்பம் இல்லாமல் 20.9% முதல் 33% வரை ஆக்சிஜன் தரக்கூடிய முகக்கவசம் ரூ.100 வரையிலும் விலை நிர்ணயம்செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

இது மலைப்பகுதிகளில் வேலை செய்யும் ராணுவ வீரர்களுக்கு உபயோகமாக இருக்கும். முகக்கவசம் அளவில் நிற்காமல் தீபாவளி சமயங்களில் துணிக்கடைகள், கூட்டங்கள் அதிகமாக இருக்கும் இடங்கள் விமானங்கள், ரயில் பெட்டிகள் ஆகிய இடங்களில் பேணல் போன்ற அமைப்பை ஏற்படுத்தி இந்தத் தொழில்நுட்பத்தைத் தருவதன் மூலம் அங்கு இருக்கக்கூடிய மக்களுக்கு ஆக்சிஜன் அளவு சரியான அளவில் கிடைப்பதற்கு இந்தத் தொழில்நுட்பம் உறுதுணையாக இருக்கும்.

இந்த முகக்கவசம் தற்போது தயாராகி உள்ளது, முகக்கவசம் தயாரிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் அல்லது தனியார் நிறுவனங்கள் எதுவும் தயாராக இருந்தால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவாக வரும்" எனக் கூறியுள்ளார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.