உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு பெற்றது. இந்தப் போட்டியில் 719 காளைகள் ஈடுபடுத்தப்பட்டன. அவற்றைப் பிடிக்க 700 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். அதில் 12 காளைகளை பிடித்த விராட்டிபத்து பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கு முதல் பரிசாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நன்கொடையாக வழங்கிய ரூ.6 லட்சம் மதிப்புள்ள கார் வழங்கப்பட்டது.
அதையடுத்து 9 காளைகளை பிடித்த அரிட்டாப்பட்டியைச் சேர்ந்த கருப்பண்ணன் என்பவருக்கு இரண்டாம் பரிசாக எழுமின் அமைப்பு நன்கொடையாக வழங்கிய 3 மதிப்புள்ள நாட்டு கறவை மாடுகள் இரண்டு வழங்கப்பட்டன. 8 காளைகளை பிடித்து மூன்றாமிடம் பிடித்த சக்தி என்பவருக்கு தங்கக்காசு இரண்டு வழங்கப்பட்டன.
இந்தப் போட்டியில், சந்தோஷ் என்பவரின் காளை முதல் காளையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நன்கொடையாக வழங்கிய ரூ.6 லட்சம் கார் பரிசாக வழங்கப்பட்டது.
அதையடுத்து, மேலமடை சேர்ந்த வழக்கறிஞர் அருண் என்பவரின் காளை இரண்டாவதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் சரந்தாங்கியைச் சேர்ந்த தவம் என்பவரது காளை மூன்றாவது காளையாக வென்று தங்க நாணயத்தை பெற்றுத்தந்துள்ளது.
இதையும் படிங்க: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... கெத்து காட்டும் மாடுகளும் வீரர்களும்