உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா கோலாகலமாக தொங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் ஆறாம் நாளான நேற்று (அக்.1) அம்மன் அர்த்தநாரீஸ்வர் அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளித்தார்.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாரதனையும் காண்பிக்கப்பட்டது. கொலு மண்டபத்தில் எழுத்தருளிய அம்மனை ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.
கோவில் வளாகத்தில் உள்ள கொலுச்சாவடியில் வைக்கப்பட்ட சிவபெருமானின் 64 திருவிளையாடல்கள் தொடா்பான பொம்மைகள் மற்றும் இதர கொலு பொம்மைகளை பக்தர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
இதையும் படிங்க: அண்ணாமலையார் கோவிலில் ஆறாம் நாள் நவராத்திரி விழா