நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட கே.டி.சி.நகரில் அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு ஆதரவாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்:-
வெற்றி வியூகம்
முதலமைச்சர் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மூலம் 5 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதிய தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் தேர்தல் பிரசாரத்தில் நேற்று அறிவித்துள்ளார். எதிர்கட்சி தலைவர் தனது இயலாமையை ஒப்புக் கொள்ளும் விதமாக நீங்களே ராஜினாமா செய்யுங்கள் என்கிறார்.
இதையும் படிக்கலாம்: 'செத்த எலி' விமர்சனம்: கட்டாருக்கு காங்கிரஸ் கண்டனம்
2021ஆம் ஆண்டில் மீண்டும் இந்த அரசை அமைத்து காட்டும் வகையில் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். இரும்புத்திரை போட்டு இந்த அரசின் சாதனை திட்டங்களை மக்களிடம் இருந்து மறைத்து விடலாம் என கனவு கண்டுகொண்டு இருக்கிறார்கள். அதனை தகர்த்து உடைக்கும் தேர்தல் வியூகத்தை முதலமைச்சர் பழனிச்சாமி அமைத்துள்ளார்.
திமுக வாடிக்கை, மக்கள் வேடிக்கை
எனவே எதிர்கட்சித் தலைவரின் பரப்புரை வாக்குறுதிகள் மக்களுக்கு எந்த பயனும் அளிக்கப்போவதில்லை. காங்கிரஸ் கட்சியின் தற்போதைய செய்தித் தொடர்பாளர் குஷ்பூவுக்கு என்ன நடந்தது? திமுகவில் இருந்து வெளியேறிய நிலையில் எங்கு செல்வதென்று தெரியாமல் விழித்தார். பின்னர் வேறு வழியில்லாமல் காங்கிரஸில் இணைந்தார். அகில இந்திய அளவில் காங்கிரஸ் காணாமல் போய் விட்டது.
இதையும் படிக்கலாம்: 'அதிமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை' - நடிகை குஷ்பூ!
தேர்தல் ஆணையம் சரியாக, சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பது மக்கள் தீர்ப்பு, மக்களை திசை திருப்புவதிலும், குழப்புவதிலும் திமுக வாடிக்கையாக வைத்துள்ளது.
மக்கள் அதை வேடிக்கையாக தான் பார்க்கிறார்கள் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாம்: 'ஆம் நான் தப்பித்தவறி வந்த முதலமைச்சர்' -நாராயணசாமி