ETV Bharat / city

பழைய கட்டடம் இடிந்து விழுந்து காவலர் பலி - நால்வர் கைது - மதுரை நகராட்சி ஆய்விற்கு பின்னும் தொடரும் விபத்துகள்

மதுரையில் 110 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்த விபத்தில் ரோந்து பணியில் இருந்த காவலர் உயிரிழந்தார்.

Madurai old building collapsed accident  Madurai policeman saravanan death on spot  madurai old building accident continued  மதுரையில் 110 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்து விழுந்து விபத்து  மதுரையில் அதிக பழமையான கட்டடங்கள்  மதுரை நகராட்சி ஆய்விற்கு பின்னும் தொடரும் விபத்துகள்
பழைய கட்டிடம் இடிந்து விழுந்து ரோந்து பணியில் இருந்த காவலர் பலி
author img

By

Published : Dec 22, 2021, 12:29 PM IST

Updated : Dec 22, 2021, 8:37 PM IST

மதுரை: மதுரை விளக்கத்தூண் காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர்களான சரவணன், கண்ணன் ஆகிய இருவரும் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நள்ளிரவு 12.30 மணியளவில் கீழவெளி வீதியில் உள்ள கடை ஒன்றின் முன்பாக நின்றுகொண்டிருந்த போது அந்த பகுதியில் இருந்த முகம்மது இத்ரீஸ் என்பவருக்கு சொந்தமான 110 ஆண்டுகள் பழமையான கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது.

இதனால் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி காவலர் சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு காவலரான கண்ணன் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து காரணமாக இடிந்து விழுந்த கட்டடத்தின் உரிமையாளர் முகமது இத்ரீஸ், மேலாளர் அப்துல் ரசாக் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடை உரிமையாளர் நாகசங்கர், சுப்பிரமணி ஆகியோரையும் கைது கைது செய்யப்பட்ட இடங்கள்.

பழமையான கட்டடத்தை இடிக்க நோட்டீஸ் அளித்தும் தொடர்ந்து அஜாக்கிரதையாக இருந்ததாக அவர்கள் அனைவரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பழமையான கட்டடங்கள்

மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதியில் பழமையான கட்டடங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள நிலையில், தீயணைப்புத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உரிய ஆய்வு மேற்கொண்டு கட்டட உறுதி தன்மை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தொடரும் விபத்துகள்

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே கடந்த 2020ஆம் ஆண்டில் தீபாவளியன்று பழமையான கட்டடம் இடிந்து விழுந்து தீயணைப்புத்துறையினர் இருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:Rasi Palan: இன்றைய ராசிபலன் - டிசம்பர் 22

Last Updated : Dec 22, 2021, 8:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.