ETV Bharat / city

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? - madurai hc bench questions actions taken regarding sewage water mixing

மதுரை: திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

sewage water mixing in thamiraparani river

author img

By

Published : Mar 17, 2020, 8:41 AM IST

திருநெல்வேலியைச் சேர்ந்த சுந்தரவேல் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆற்றில் சுமார் 125 கிமீ பயணம் செய்து தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் அருகே கடலில் கலக்கிறது.

இதில் சில பகுதியில் தொழிற்சாலைக் கழிவு நீர் கலக்கிறது. இதனால், தாமிரபரணி ஆறு முழுவதுமாக மாசடைந்துள்ளது. இதனால் அதனை குடிநீராக பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஆற்றில் குளிப்பவர்களுக்கு தோல் நோய், கண் எரிச்சல் போன்ற வியாதிகள் ஏற்படுகின்றன. எனவே தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும், மறு சுழற்சி செய்யவும் உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.

டாஸ்மாக் கடைகளுக்கும் மாஸ்க், சானிடைசர் வழங்க உத்தரவு!

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஜெயச்சந்திரன் அமர்வு, தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பி வழக்கு விசாரணையை மார்ச் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.