ETV Bharat / city

புத்தக திருவிழாவில் மந்த நிலை... வேதனையில் பதிப்பாளர்கள்..! - வேதனையில் பதிப்பாளர்கள்

மதுரை: பொருளாதார மந்தநிலை காரணமாக புத்தக விற்பனை குறைந்துள்ளளதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க நிர்வாகிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

புத்தக திருவிழா
author img

By

Published : Aug 28, 2019, 10:08 PM IST

Updated : Aug 29, 2019, 8:42 AM IST

மதுரையில் 14ஆவது புத்தகத் திருவிழா வருகின்ற ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் ஒன்பதாம் தேதி வரை மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது அதுகுறித்து இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் வயிரவன் பேசுகையில், "கடந்த 42 ஆண்டுகளாகப் புத்தகக் கண்காட்சியை நாங்கள் நடத்திவருகிறோம். மதுரையில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான வாசகர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த கண்காட்சிக்கு வருகை தந்து சிறப்பித்துள்ளனர்.

அதேபோன்று இந்த முறையும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். கடந்த ஆண்டு சுமார் 250 அரங்குகள் இடம்பெற்றிருந்தன. இந்த ஆண்டும் அதே எண்ணிக்கையில் இடம்பெறவுள்ளன. மக்களிடையே வாசிக்கின்ற பழக்கத்தை ஏற்படுத்தவும், அதை மேம்படுத்தவும் இதுபோன்ற புத்தகத் திருவிழாக்களை ஒரு அறிவுத்திருவிழாவாகவே தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்திவருகிறது.

தற்போது நடைபெறவுள்ள 14ஆவது மதுரை புத்தகத் திருவிழாவில், பல்துறை சார்ந்த 50 லட்சம் புத்தகங்கள் இடம்பெறவுள்ளன. அதுமட்டுமன்றி நாள்தோறும் புத்தக வெளியீட்டு விழாக்களும், பள்ளி மாணவ மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாகப் பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மேலும் பள்ளி கல்லூரி மாணவ - மாணவியர் வந்து பார்வையிட்டுச் செல்வதற்குச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன அதேபோன்று அரங்கிற்குள் தண்ணீர் கழிப்பறை வசதிகள் அனைத்தும் தேவையான அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாளும் காலை 11 மணிக்குத் தொடங்கி, இரவு 9 மணிவரை நடைபெறுகிறது. நுழைவு கட்டணம் கிடையாது. இங்கு இடம்பெற உள்ள அரங்குகளில் 149 தமிழ் அரங்குகளும், 67 ஆங்கில அரங்குகளும், 7 பல்லூடக அரங்குகளும் இடம்பெறவுள்ளன. அத்துடன் இந்திய அரசு நிறுவனங்களான, இந்தியா பப்ளிகேஷன் டிவிஷன் மற்றும் சாகித்ய அகாடமி அரங்குகளும் இடம்பெறுகின்றன.

ஆகஸ்ட் 30ஆம் தேதி தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கண்காட்சியைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றுகிறார். மதுரை மாவட்ட ஆட்சியர் ராஜசேகர் தலைமை வகிக்கிறார். இந்நிகழ்ச்சியில் மதுரை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா வாழ்த்துரை வழங்குகிறார். புத்தகத் திருவிழாவுக்கு வருகை தந்து நூல்கள் வாங்கிச் செல்கின்ற அனைவருக்கும் 10 விழுக்காடு தள்ளுபடி விலையில் வழங்கப்படும்” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், கடந்த சில ஆண்டுகளாகப் புத்தக விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாகப் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை, பதிப்பாளர்களைப் பெருமளவு பாதிக்கச் செய்து உள்ளது. இதனால் புத்தக விற்பனை சரிந்துள்ளது. பொதுமக்களின் வாசிப்பு பழக்கமும் குறைந்துள்ளது வேதனை தருகிறது என்றார்.

Intro:பொருளாதார மந்தநிலை காரணமாக புத்தக விற்பனை குறைந்துள்ளது - தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க நிர்வாகிகள் வேதனை

தற்போதைய பொருளாதார மந்தநிலை காரணமாக புத்தக விற்பனை பெரிதும் சரிந்துள்ளது இதன்காரணமாக வாசிப்பு பழக்கமும் குறைந்துள்ளது என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க நிர்வாகிகள் கூறினர்
Body:பொருளாதார மந்தநிலை காரணமாக புத்தக விற்பனை குறைந்துள்ளது - தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க நிர்வாகிகள் வேதனை

தற்போதைய பொருளாதார மந்தநிலை காரணமாக புத்தக விற்பனை பெரிதும் சரிந்துள்ளது இதன்காரணமாக வாசிப்பு பழக்கமும் குறைந்துள்ளது என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க நிர்வாகிகள் கூறினர்

மதுரையில் 14வது புத்தகத்திருவிழா வருகின்ற ஆகஸ்ட் 30-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் ஒன்பதாம் தேதி வரை மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது அதுகுறித்து இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் வயிரவன் பேசுகையில், கடந்த 42 ஆண்டுகளாக புத்தக கண்காட்சியை நாங்கள் நடத்தி வருகிறோம் மதுரையில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான வாசகர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த கண்காட்சிக்கு வருகை தந்து சிறப்பித்துள்ளனர்

அதேபோன்று இந்த முறையும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம் கடந்த ஆண்டு சுமார் 250 அரங்குகள் இடம்பெற்றிருந்தன இந்த ஆண்டும் அதே எண்ணிக்கையில் இடம்பெறவுள்ளன மக்களிடையே வாசிக்கின்ற பழக்கத்தை ஏற்படுத்தவும் அதை மேம்படுத்தவும் இதுபோன்ற புத்தகத் திருவிழாக்களை ஒரு அறிவுத்திருவிழாவாகவே தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தி வருகிறது

தற்போது நடைபெற உள்ள 11ஆவது மதுரை புத்தகத் திருவிழாவில் பல்துறை சார்ந்த 50 லட்சம் புத்தகங்கள் இடம்பெறவுள்ளன அதுமட்டுமன்றி நாள்தோறும் புத்தக வெளியீட்டு விழாக்களும் பள்ளி மாணவ மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாக பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன மேலும் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் வந்து பார்வையிட்டு செல்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன அதேபோன்று அரங்கிற்குள் தண்ணீர் கழிப்பறை வசதிகள் அனைத்தும் தேவையான அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன

ஒவ்வொருநாளும் காலை 11 மணிக்கு துவங்கி இரவு 9 மணிவரை நடைபெறுகிறது நுழைவு கட்டணம் கிடையாது இங்கு இடம்பெற உள்ள அரங்குகளில் 149 தமிழ் அரங்குகளும் 67 ஆங்கில அரங்குகளும் 7 பல்லூடக அரங்குகளும் இடம்பெறவுள்ளன அத்துடன் இந்திய அரசு நிறுவனங்களான இந்தியா பப்ளிகேஷன் டிவிஷன் மற்றும் சாகித்ய அகாடமி அரங்குகளும் இடம்பெறுகின்றன

வருகின்ற ஆகஸ்ட் 30ஆம் தேதி தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே ராஜூ கண்காட்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார் மதுரை மாவட்ட ஆட்சியர் ராஜசேகர் தலைமை வகிக்கிறார் இந்த நிகழ்ச்சியில் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா வாழ்த்துரை வழங்குகிறார்.

புத்தகத் திருவிழாவுக்கு வருகை தந்து நூல்கள் வாங்கிச் செல்கின்ற அனைவருக்கும் 10 சதவீதம் தள்ளுபடி விலையில் வழங்கப்படும் என்றனர்

மேலும் அவர்கள் கூறுகையில் கடந்த சில ஆண்டுகளாக புத்தக விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது குறிப்பாக பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை பதிப்பாளர்களை பெருமளவு பாதிக்கச் செய்து உள்ளது இதனால் புத்தக விற்பனை சரிந்துள்ளது பொதுமக்களின் வாசிப்பு பழக்கமும் குறைந்துள்ளது வேதனை தருகிறது என்றனர்.

இச்சந்திப்பின்போது சங்கத்தின் செயலாளர் வெங்கடாசலம் செயற்குழு உறுப்பினர் புருஷோத்தமன் புலவர் செந்தூரன் ஆகியோர் உடனிருந்தனர்.Conclusion:
Last Updated : Aug 29, 2019, 8:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.