ETV Bharat / city

தினகரன் அலுவலகம் எரிப்பு: அட்டாக் பாண்டி வழக்கு ஒத்தி வைப்பு

தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கில் கைதான அட்டாக் பாண்டிக்கு 10 நாள்கள் அவசர விடுப்பு வழங்கக் கோரிய மனு மீதான விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Madras High Court Madurai Bench
Madras High Court Madurai Bench
author img

By

Published : Jul 26, 2021, 7:50 PM IST

தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கில், மதுரையைச் சேர்ந்த அட்டாக் பாண்டி என்பவர் கைதாகி மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இதனிடையே, அட்டாக் பாண்டி மனைவி தயாளு உயர் நீதிமன்ற மதுரை கிளை மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ”எனது கணவர் அட்டாக் பாண்டியின் தாயார் ராமுத்தாய் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன் காரணமாக, பாண்டிக்கு 10 நாள்கள் அவசர விடுப்பு வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பான விசாரணை ஜூலை 9ஆம் தேதி நடந்தது. அப்போது நீதிபதிகள், மதுரை மத்திய சிறைக்கண்காணிப்பாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில் நீதிபதிகள், கல்யாணசுந்தரம், புகழேந்தி இருவரும், இந்த வழக்கை இதுதொடர்பான மற்றொரு வழக்குடன் சேர்த்துப் பட்டியலிட உத்தரவிட்டனர். அத்துடன் விசாரணையை ஜூலை 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: அட்டாக் பாண்டி சிறை விடுப்பு மனுவுக்கு பதிலளியுங்கள் - உயர் நீதிமன்றக் கிளை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.